சாய்ந்தமருதில் மூன்று நாட்கள் கடையடைப்பு போராட்டம்; உள்ளுராட்சி சபையை பெறுவதற்கான, அடுத்த கட்ட முயற்சி

🕔 October 29, 2017

– யூ.கே. காலித்தீன் –

சாய்ந்தமருது பிரதேசத்தில் நாளை திங்கட்கிழமை தொடக்கம் 03 நாட்களுக்கு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையைப் பிரகடனப்படுத்துமாறு கோரி, இந்த போராட்டத்தினை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசல், உலமா சபை மற்றும் பொது அமைப்புகளின் ஒன்றியம் ஆகியவை இணைந்து, நேற்று சனிக்கிழமை இரவு சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலில் அதன் தலைவர் வை.எம். ஹனீபா தலைமையில் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளன.

சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபையொன்றினை உருவாக்கித் தருமாறு, அப்பிரதேச மக்கள் நீண்டகாலமாகக் கோரிவரும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் அதனை நிறைவேற்றித் தருவதாகக் கூறி, பின்னர் ஏமாற்றியுள்ளன. இந்த நிலையில் சாய்தமருது உள்ளுராட்சி சபையைப் பிரகடனப்படுத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தத்தங்களைப் பிரயோகிப்பதற்காகவே, மேற்படி கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

இதேவேளை, வயது வந்த அனைவரும் கடையடைப்பு நடைபெறும் மூன்று நாட்களும் தொடர்ச்சியாக நோன்பு நோற்று, விஷேட பிராத்தனையில் ஈடுபடுவது எனவும், சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் பள்ளிவாசல் மேற்கொண்ட முன்னெடுப்புகள் தொடர்பில், மக்களை தெளிவூட்டும் பொதுக் கூட்டம் நடத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்