தேர்தல்களில் போட்டியிடுவதற்காகவே, மு.கா. செயலாளர் பதவியை ராஜிநாமா செய்தேன்: மன்சூர் ஏ. காதர்

🕔 September 7, 2017

– முன்ஸிப் அஹமட் –

திர் காலத்தில் தேர்தல்களில் போட்டியிடும் நோக்குடன், மு.காங்கிரசின் செயலாளர் பதவியை, தான் – ராஜிநாமா செய்துள்ளதாக மன்சூர் ஏ. காதர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரசில் – தான் வகித்து வந்த செயலாளர் பதவியை ராஜிநாமா செய்தமை தொடர்பில், மன்சூர் ஏ. காதர் தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கமொன்றினை பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவிலேயே மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் அவர் தெரிவிக்கையில்;

“கட்சியின் பொதுவான நன்மை கருதியும் எதிர்காலத்தில் தேர்தல்களைச் சந்திக்கும் நோக்கத்தாலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் பதவியை 06ஆம் திகதி (நேற்று புதன்கிழமை) முதல் ராஜினாமா செய்துள்ளேன்.

அதன்படி, எனது ராஜினாமாவை இன்று வியாழக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசபிரியவிடம், கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில், தேர்தல் செயலகத்தில் வைத்து கையளித்து விட்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் பதவியினை வகிப்பவர்கள், நேரடி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது என்கிற நிபந்தனையொன்று உள்ளது.

அதனாலேயே, “எதிர் காலத்தில் தேர்தல்களில் போட்டியிடும் நோக்குடன், செயலாளர் பதவியை ராஜிநாமா செய்துள்ளேன்” என்று, மன்சூர் ஏ. காதர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: மு.காங்கிரசின் செயலாளராக நிசாம் காரியப்பர் நியமனம்; மன்சூர் ஏ. காதர் அவுட்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்