கிடச்சிமடுவுக்கு பாலம்; அடிக்கல் நட்டார், அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

🕔 September 7, 2017

ட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணானை மேற்கு கிடச்சிமடு விசரோடை பாலத்துக்கான அடிக்கல்லினை ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்  நட்டு வைத்தார்.

இந் நிகழ்வு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் இலங்கை முழுவதும் ஆயிரம் பாலம் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்தப் பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுடன் இணைந்து கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியும் பாலத்துக்கான அடிக்கல்லை நட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்