பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடை

🕔 September 1, 2017

ருபது மைக்ரோன் அல்லது அவற்றுக்குக் குறைவான அளவினையுடைய பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொலித்தீன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனை காரணமாக சூழலுக்கு ஏற்படும் தீங்கினை குறைக்கும் பொருட்டு, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உணவுப் பொதிகளை பொதி செய்வதற்கு பயன்படுத்தப்படும் லன்ச் சீட் உற்பத்தி, விற்பனை மற்றும் பாவனை ஆகியவை இதற்கிணங்க தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும், பொலித்தீன் கொண்டு அலங்காரங்கள் மேற்கொள்வதும் இதன் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது.

பொலித்தீன் பாவனைக்குப் பதிலாக கடதாசி, ஓலை மற்றும் துணி ஆகியவற்றினை மாற்றீடாகப் பயன்படுத்துவதற்கு ஊக்குவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்