பார்க்கும் இடமெல்லாம் நல்லாட்சியாளரின் கட்டவுட்; புதிய அரசியல் கலாசாரம் எங்கே: நாமல் ராஜபக்ஷ கேள்வி

🕔 September 1, 2017

ருக்கு தான் உபதேசம் எனக்கு இல்லை’ என்ற அடிப்படையிலே நல்லாட்சி அரசங்கத்தின் அனைத்துசெயல்பாடுகளும் அமைந்துள்ளதாக அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

ஊடகங்களுக்கு நேற்று வியாழக்கிழமை கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்;

“நாட்டில் ஊழல் அற்ற புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வந்ததாகக் கூறிய நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில், எல்லா விடயங்களிலும் நாடு முன்பு இருந்ததை விடவும் பின்னோக்கி செல்வதை காணக் கூடியதாக உள்ளது.

இந்த ஆட்சியில் மக்களுக்கு எவ்வளவு பிரச்சினை இருக்கிறது என்பதை தினம் தினம் இடம்பெறும் ஆர்பாட்டங்களினூடாகவும் போராட்டங்களினூடாகவும் கண்டுகொள்ள முடியும்.

பிரச்சினைகள் ஒரு புறம் அதிகரித்து செல்லும் நிலையில், அரசியல் கலாசாரத்தினை மாற்ற வந்ததாகக் கூறிய நல்லாட்சி அரசாங்கம், தற்போது தலைகீழாகவே பயணிக்கிறது.

கட் அவுட் மற்றும் போஸ்டர் இல்லாத புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதாக மேடை போட்டு கத்தியவர்களின் போஸ்டர்களையும் கட்டவுட்களையுமே, தற்போது கொழும்பில் திரும்பிய பக்கமெல்லாம் காணமுடிகிறது.

அன்று கட்டவுட் இல்லாத அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதாக தற்போதய ஜனாதிபதி கூறிய போதுஅதனை வரவேற்றவர்கள், இன்று மௌனமாக இருப்பது கவலைக்குறிய விடயமாகும்” என்றார்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்