சொந்த சிகிச்சைக்கு, ஜனாதிபதி நிதியத்தில் பணம் பெற்றார் ராஜித: அம்பலப்படுத்தினார் ஜே.வி.பி. தலைவர்

🕔 August 24, 2017

சிகிச்சை பெற்றுக்கொள்ளும் பொருட்டு, கடந்த வருடம்  சிங்கபூர் சென்றிருந்த சுகாதார அமைச்சர் ாஜித சேனாரத்ன, அந்த சிகிச்சை செலவுகளுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து 01 கோடி ரூபாவினை பெற்றிருந்ததாக ஜே.வி.பி. தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க நேற்று புதன்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார்.

இந்த செயலுக்காக அமைச்சர் ராஜித வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அரச வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில், அனுர குமார திஸாநாயக்க நேற்று சபையில் விமர்சனங்களை முன்வைத்தார். இதன்போது, அனுரவுக்கும் அமைச்சர் ராஜிதவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. இந்த நிலையிலேயே, மேற்படி தகவலை அனுர குமார திஸாநாயக்க வெளியிட்டார்.

அனுர குமார திஸாநாயக்க, சுகாதார அமைச்சரை நோக்கி பேசுகையில்;

“இலங்கையிலுள்ள அரச வைத்தியசாலைகள் உலக தரம் வாய்ந்தவை என்றால், சுகாதார அமைச்சர் தனது சிகிச்சைகளுக்காக ஏன் சிங்கபூர் சென்றார்” என கேள்வியெழுப்பினார்.

மேலும், அந்த சிகிச்சைக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து அமைச்சர் ராஜித 01 கோடி ரூபாவைப் பெற்றுக் கொண்டதாகவும் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்