துபாய், பஹ்ரைன்; செம நையாண்டி: கிழக்குக்கும் மத்திய கிழக்குக்கும் நடக்குற உச்சக்கட்ட ஆபரேஷன்

🕔 August 5, 2017

ல்முனை மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களை, துபாய் மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகளைப் போன்று அபிவிருத்தி செய்யவுள்ளதாக மு.கா. தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் நேற்று முன்தினம் தனது அமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்து தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தமையினை அடுத்து, அதனை நையாண்டி செய்யும் விதமாக பல்வேறு ‘மீம்’களும், பேஸ்புக் பதிவுகளும் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன.

அவ்வாறாவற்றில் ஒரு பேஸ்புக் பதிவினை உங்களுக்கு வழங்குகின்றோம்.

தலைவர்: இது தான் நாம நடத்துற திட்டத்துக்கான வரைபடம்.
இது சம்மாந்துறை, இது கல்முனை.

மைக் வன், நீ என்ன பண்றெ… எல்லா உடுப்புக் கடைக்கும் போய் வெள்ள ஜுப்பாச்சீலய கலெக்ட் பண்ணி பொதுமக்கள் எல்லாரையும் கூப்ட்டு அளவெடுத்து இலவச தோப்பு விநியோகம் என்ற தலைப்புல தோப்பு தச்சிக் குடுக்குற. டெய்லர்மாருக்கும் வேலைவாய்ப்பா பெய்த்திரும். எல்லாரும் ஜுப்பா தோப்பு போட்ட மாதிரியும் பெய்த்திரும்.

மைக் 2, நீ என்ன பண்ற. கறுத்த கயிறை வாங்கி ரவுன்ட் ரவுன்டாக்கி எல்லாருக்கும் ஜுமுஆக்குப் பொறகு நோட்டிஸ் பகிர மாதிரி பகிந்து விடுறாய். தலயில போடுறத்துக்கு.

மைக் 3, நீ கெடந்த அடிக்கல்லை எல்லாம் தோண்டி எடுத்து அவடத்த ஈச்சம் மரத்த நாட்டுற. ஈச்சமரம் கெடைக்காட்டி தென்னமரத்தை நாட்டி “இது ஈச்சமரம்” என்டு எழுதி ஒட்டு

மைக் 4, நீ என்ன பண்ற. கிழக்கு மாகாணத்துல இருக்கிற எல்லா மணிக்கூட்டுக் கோபுரத்தயும் புடுங்க ஏற்பாடு செய். எல்லாத்தயும் அப்டியே அலேக்கா மெஷின் பொட்டில தூக்கி வந்து ஒன்டுக்கு மேல ஒன்டு நாட்டி வை. நாட்டி வச்சி LED பல்புகளை தொங்க விடு. கூட ஒரு போர்டையும் தொங்க விடு. ‘Burj SL Khalifa’

மைக் 5, எங்க அவன். அடேய்…! நீ என்ன பண்றெ. சிறந்த ஓடாவியப் புடி! ஒரு அடி அகலத்துலயும் நாலு அடி நெடுப்பத்துலயும் ரென்டு பலகய செற் பண்ணு. செற் பண்ணி நல்ல பெயின்டரப் புடிச்சி “துபாய் உங்களை அன்புடன் வரவேற்கிறது”. “பஹ்ரைன் உங்களை அன்புடன் வரவேற்கிறது” என்டு எழுதி சம்மாந்துறை, கல்முனை எல்லயில நாட்டி வை.

Guys, நாம நடத்துற இந்த ஆபரேஷன் கிழக்குக்கும் மத்திய கிழக்குக்கும் நடக்குற உச்சக்கட்ட ஆபரேஷன். இதுல எடுத்து வைக்கிற ஒவ்வொரு ஸ்டெப்பும் நிதானமாவும் ஜாக்கிரதயாவும் இருக்கணும்.

Guys: ஓகே பொஸ்… நாரே தக்பீர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்