அமைச்சர் ஒருவரின் கம்பனிகளில் 100 கோடி ரூபாய் முதலீடு; பிணை முறி விவகாரத்தில் தொடர்பு: அழைக்கவுள்ளது ஆணைக்குழு

🕔 August 6, 2017

பிணை முறி விவகாரம் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழு, மிக முக்கியமான அமைச்சர் ஒருவரை விசாரணைக்கு வருமாறு, அடுத்த வாரமளவில் அழைக்கவுள்ளதாகத் தெரியவருகிறது.

அண்மைக் காலத்தில், மேற்படி முக்கிய அமைச்சரின் 08 கம்பனிகளில் 01 பில்லியன் (100 கோடி) ரூபாய், திடீரென முதலீடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, குறித்த கம்பனிகளின் அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர்.

எனவே, பிணை முறி விவகாரம் தொடர்பில் தலையிட்டுள்ள மேற்படி அமைச்சரும், கடுமையான குற்றச்சாட்டை எதிர்கொள்வார் என்று, அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு நெருக்கமான வேறொரு அமைச்சர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், பிணை முறி விவகாரம் தொடர்பில் தனக்கு எதிரான பிரசாரங்களை, ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரே மேற்கொண்டு வருவதாக, அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்