ரவி கருணாநாயக்க ராஜிநாமா செய்ய வேண்டும்; வலியுறுத்துகிறார் அமைச்சர் தயாசிறி: கூட்டுக்குள் குழப்பம்

🕔 July 31, 2017

மைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

பிணை முறி பரிமாற்ற விவகாரம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்காகவே, ரவி ராஜிநாமா செய்ய வேண்டுமென தயாசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.

குருணாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.

“சிறந்த மனிதருக்கான குணங்கள் ரவி கருணாநாயக்கவுக்கு இருக்குமாயின், அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு இறுதி தீர்ப்பு வரும் வரை, தன்னுடைய பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும்” என தாயசிறி விபரித்தார்.

மேலும், ரவி ராஜிநாமா செய்யாமையால் அரசாங்கத்தில் இருக்கும் மற்றையவர்களும் சிரமத்திற்கு முகம் கொடுத்து வருவதாகவும் தயாசிறி ஜயசேகர மேலும் கூறியுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி பதவி ஏற்றதன் பின்னர், பிணை முறி பரிமாற்ற விவாகரம் குறித்த விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய விளையாட்டுத்துறை அமைச்சர்; மோசடியுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்