அமைச்சர் ரவிக்காக குரல் கொடுப்போம்; ஐ.தே.கட்சி செயலாளர் கபீர் ஹாசிம்
அமைச்சர் ரவி கருணாநாயக்க மீதான குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவரைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி குரல் கொடுக்கும் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டால், அவருக்காக தமது கட்சி குரல் கொடுக்கும் எனவும் அமைச்சர் கபீர் உறுதிபடத் தெரிவித்தார்.
“அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றச்சாட்டு மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளது. அவர் குற்றம் செய்துள்ளார் என, சட்டத்தின் முன்னால் நிரூபிக்கப்படும் வரை அவரை பாதுகாப்பதற்காக குரல் கொடுப்போம்” என, அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.