ஹலால் வரிப் பணம் எங்கே செல்கிறது; கண்டு பிடித்துச் சொல்கிறது பொதுபல சேனா

🕔 June 29, 2017

விசர் நாய்களை கட்டிப்போடாமல் விட்டால், பிரச்சினைகள் பெரிதாகும் என்று பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனாவின் ராஜகிரியவிலுள்ள அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இவ்வாறு கூறினார்.

அமைதியான போக்கை பொதுபல சேனா  தற்போது பின்பற்றி வருகின்றது. ஆனால் விசர் நாய்களை கட்டிப்போடாமல் விட்டால் பிரச்சினைகள் மேலோங்கும் என அவர் எச்சரித்தார்.

இதேவேளை, முஸ்லிம் அமைப்புகள் ஊடாக ஹலால் வரிப் பணம் ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றமை தொடர்பில், அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், இதன்போது டிலந்த விதானகே கோரிக்கை விடுத்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்