இஸ்லாமிய விரோத சக்திகளுக்கு நல்லாட்சியின் கதவுகள், அகலத் திறக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

🕔 June 29, 2017

 

ஸ்லாமியர்களை உலக அளவில் அழிப்பதற்கு திட்டம் போட்டு செயற்படுபவர்களுக்கு நல்லாட்சி அரசின் கதவுகள் அகல திறந்து கொடுக்கப்பட்டுள்ளன என்று, ஒன்றிணைந்த எதிரணியின் பிரமுகரும், பாணந்துறை பிரதேச சபை முன்னாள் தலைவருமான இபாஸ் நபுஹான்தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

கடந்த ஜனாதிபதி தேர்தலின் வெற்றி தோல்வியில் சர்வதேச சக்திகளின் காய் நகர்த்தல்கள் இருந்த விடயம் தொடர்பில், இன்று அரசியல் மேடைகளில் வெகுவாக பேசப்பட்டு வருகின்றன. இதன் வெளிப்பாடே தற்போது இலங்கை நாட்டை நோக்கிய சர்வதேச சக்திகளின் மோதல்கள், ஒரு போதுமில்லாதவாறு அதிகரித்துள்ளன.

கடந்த காலங்களை போலல்லாது இவற்றுள்  சில விடயங்கள் தொடர்பில், இலங்கை முஸ்லிம் சமூகம் முக்கிய கவனம் செலுத்த வேண்டிய கடப்பாடு உள்ளது.

தற்போதைய அரசானது இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடன் மிக நெருங்கிய தொடர்பை பேணுகிறது. இவ்விரண்டு நாடுகளின் மிக நெருங்கிய சகாவாக அமேரிக்கா உள்ளது. இந்த கூட்டை எடுத்து நோக்கினால் இந் நாடுகள் முஸ்லிம்களுக்கு எதிரான நிகழ்ச்சி நிரல்களோடு உலக அளவில் செயற்படுபவையாகும்.

இந்தியாவிலுள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கீழ் இயங்கும் இலங்கை இந்து மகா சபை, பொதுபல சேனாவுக்கான ஆதரவை பகிரங்கப்படுத்தி செயற்படும் நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் பொதுபல சேனா இணைந்து செயற்படும் எ,ன ஏற்கனவே பொதுபல சேனா அறிவித்துள்ளது.

ஆர்.ஆர்.எஸ் என்றால் அது மோடியின் தாய் வீடு. இந்தியாவில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, அந்த நாட்டு அரசாங்கத்தின் அனுசரனையுடன் நடத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்தியாவிலும் இலங்கையிலும் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் விடயங்களை நோக்கும்போது, இவ்விரு நாடுகளிலும் இனவாதத்தை, ஒரு தாய் சக்தியே பின்புலத்தில் இருந்து இயக்குகிறது என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்த விடயங்கள் ஒரு புறமிருக்க, அண்மையில் முன்னாள் ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தான் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அங்கு அவரைச் சந்தித்த பாகிஸ்தான் புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர், மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குவோம் என கூறியுள்ளார். மேலும், மஹிந்தவுக்கு எதிராக சூழ்ச்சியகள் இடம்பெற்ற விதம் தொடர்பிலும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். பாகிஸ்தான் புலானாய்வு பிரிவு பிரதானி கூட, மஹிந்தவுக்கு எதிரான சூழ்ச்சிகள் குறித்து பேசுமளவுக்கு, விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நாட்டின் ஆட்சியாளர்கள் பலஸ்தீனத்துக்கு எதிரான போக்கை கடைப்பிடிக்கின்ற போதும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, பலஸ்தீனத்துக்கு தனது பகிரங்க ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றார். அதற்கு பகரமாக, அங்கு அவரின் பெயரில் ஒரு வீதி கூட உள்ளது.

நிகழ்காலத்தில் நடப்பவற்றைப் பார்க்கும் போது, முஸ்லிம் நாடுகளை மஹிந்த ராஜபக்ஷ, துணையாகக் கொண்டும், தற்போதைய அரசாங்கமானது முஸ்லிம்களின் எதிரி நாடுகளை துணையாகக் கொண்டும் அரசியல் செய்ய முயற்சிப்பதை அவதானிக்க முடிகிறது.

முஸ்லிம்களின் பரம விரோதியான இஸ்ரேல் போன்ற நாடுகளுடனும், மோடி போன்ற இனவாத தலைவர்களுடனும் கூட்டு வைத்டதுள்ள இந்த அரசாங்கத்திடமிருந்து, ஒரு போதும் முஸ்லிம்கள் விடிவைப் பெற முடியாது என்ற விடயத்தை, இலங்கை முஸ்லிம் சமூகம் உணர்த்து கொள்ள வேண்டும்.

எனவே, இந்த நல்லாட்சிக்கு எதிராக, பலமான அரசியல் சக்தியுடன் முஸ்லிம்கள் அணி திரள வேண்டும்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments