09 லட்சம் கிலோகிராம் போதைப் பொருட்கள், கடந்த வருடம் சிக்கின; மேல் மாகாணத்தில் அதிகம்

🕔 June 29, 2017

லங்கையில் கடந்த வருடம் மட்டும் 09 லட்சம் கிலோகிராம் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

இவற்றில் 206693 கிலோகிராம் ஹெரோயினும், 4124.5 கிலோகிராம் கஞ்சாவும், ஹசிஸ், பாபுல், பான்பராக் மற்றும் ஓப்பியம் உள்ளிட்ட ஏனைய போதைப் பொருட்கள் 6,69138 கிலோகிராமும் உள்ளடங்கும்.

கைப்பற்றப்பட்ட மேற்படி போதைப் பொருட்களில் 176,121 கிலோகிராம் ஹெரோயின், 1243.9 கிலோகிராம் கஞ்சா, 1047 கிலோகிராம் ஏனைய போதைப் பொருட்கள், மேல் மாகாணத்தில் கைப்பட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, போதைப் பொருளுக்கு அடிமையான 2,355 பேருக்கு, கடந்த வருடம் அரசாங்க வைத்தியசாலைகளிலும், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களால் இயக்கப்படும் நிலையங்களிலும் சிகிச்சை வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போதைப் பொருடன் தொடர்புபட்ட குற்றங்களில் ஈடுபட்டார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் கடந்த வருடம் கைது செய்யப்பட்டவர்களில் 80  வீதமானோர், மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்