மோட்டார் சைக்கிள் விபத்தில் சம்மாந்துறை குடும்பம் படுகாயம்: பொத்துவிலில் சம்பவம்

🕔 June 26, 2017

– கலீபா –

பொத்துவில் ஊரணிப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் ஐந்து வயதுச் சிறுவன் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை பெருநாளையொட்டி, பொத்துவிலிலுள்ள நண்பரொருவரின் வீட்டுக்குச் சென்ற சம்மாந்துறை குடும்பத்தினர், மாலை வீடுதிரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த அப்துல் மஜீது முஹம்மது றஜீஸ், றனீஸா மற்றும் றஜீத் ஆகியோரே படுகாயமடைந்த நிலையில், பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகவேகமான மோட்டார் சைக்கிளை செலுத்தியமை காரணமாக, ஊரணிப் பகுதியிலுள்ள வளைவில் சறுக்கி, இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்