ஒலிம்பிக் தின பாதை யாத்திரையை, பிரதியமைச்சர் ஹரீஸ் ஆரம்பித்து வைத்தார்

🕔 June 24, 2017
– அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன் –

லிம்பிக் தினம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையிலான பாதை யாத்திரையினை, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று வெள்ளிக்கிழமை அம்பாறையில் ஆரம்பித்து ஆரம்பித்து வைத்தார்.

இப்பாதை யாத்திரையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டு அம்பாறை நகரை வலம்வந்து வீரசிங்க பொது மைதானத்தை சென்றடைந்தனர். இதன் பின்னர் ஒலிம்தின நிழ்வுகள் ஆரம்பமாகின.

இலங்கை, தேசிய ஒலிம்பிக் குழுவின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன் தலைமையில் ஒலிம்பிக் தின நிகழ்வு அம்பாறை வீரசிங்க மைதானத்தில் நேற்று இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன்போது, இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளர் மெக்ஸ்வெல் பெர்னாண்டோ, கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்க,  விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் ஐ.பி. விஜயரட்ன, தேசிய ஒலிம்பிக் குழுவின் கல்விப் பணிப்பாளர் பேராசிரியர் பி.எல்.எச். பெரேரா, விமானப் படை, ராணுவம், பொலிஸ் ஆகியவற்றின் கிழக்குமாகாண பிரதானிகள், இலங்கை, தேசிய ஒலிம்பிக் குழுவின் உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் எனப் பலரும்  கலந்து கொண்டனர்.

இதன்போது தேசத்தை பாதுகாக்க உயிர் நீத்த படை வீரர்கள் நினைவாக, ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்தோடு ஒலிம் தின நிகழ்வை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுகளிடையே நடைபெற்ற சித்திரப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, வெற்றிக் கிண்ணம் உள்ளிட்ட பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்