பதக்கங்களை ஏலமிடுவதைத் தடை செய்யும் சட்டம்: அறிமுகமாகும் என்கிறார் அமைச்சர் தயாசிறி

🕔 June 7, 2017

ர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் நபர்கள் வென்றெடுத்த பதக்கங்களை விற்பனை செய்வதையும், ஏலத்தில் விடுவதையும் தடை செய்யும் சட்டமொன்றினைக் கொண்டு வருவதற்கு உத்திதேசித்துள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்க, தனது ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை ஏலத்தில் விடவுள்ளதாக அறிவித்திருந்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சின் ஆலோசகராக சந்திகா நியமிக்கப்பட்டு, அதற்கான சம்பளமும் வழங்கப்பட்டு வந்தது. ஆயினும், கடந்த ஏப்ரல் மாதம் முதல், அவருக்கான சம்பளத்தினை விளையாட்டுத்துறை அமைச்சர் நிறுத்தி விட்டதாக சுசந்திகா குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையிலேயே, தனது பதக்கத்தை ஏலத்தில் விடவுள்ளதாக சுசந்திகாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: ஒலிம்பிக் பதக்கத்தை ஏலமிடும் சுசந்திகாவின் முடிவு; ஜனாதிபதியின் தலையீட்டால் இடை நிறுத்தம் 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்