ராஜித உள்ளிட்ட பெரும் அணியொன்று, யானைச் சின்னத்தில் களமிறங்கவுள்ளது; ரவி தகவல்

🕔 July 11, 2015
Ravi karunanayaka - 01
– அஸ்ரப் ஏ. சமத் –


மைச்சர்கள் ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, எஸ்.பி. திசாநாயக்க, துமிந்த திசாநாயக்க,  அர்ஜூன ரணதுங்க மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிக்கா  ஆகியோரை உள்ளடக்கிய பலமான அணியொன்று – ஜ.தே.கட்சி சார்பாக, எதிர்வரும் பொதுத் தேர்தலில் குதிக்கவுள்ளதென,  நிதி அமைச்சரும் ஜ.தே.கட்சியின் உப தலைவருமான  ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

சர்வதேச வை.எம்.எம். ஏ. அமைப்பின்  தலைவர் அஸ்ரப் ஹூசைன் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே, அமைச்சர் ரவி – மேற்கண்ட விடயத்தினைக் கூறினார்.

அஸ்ரப் ஹூசைன் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்வுக்கு வருவதாகத் தெரிவித்திருந்த அமைச்சர் ரவி கருணாநாயக்க – சற்று தாமதித்தே, அந் நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார்.

ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் – அலரி மாளிகையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், தான் கலந்து கொண்டமையினாலேயே, இப்தார் நிகழ்வில் உரிய நேத்துக்கு கலந்து கொள்ள முடியாமல் போனதாகத் தெரிவித்த அமைசர் ரவி;  ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடவிருந்த முக்கிய புள்ளிகள் சிலர் –  ஜ.தே.கட்சி ஊடாக, தோ்தலில் குதிக்கவுள்ளதாகவும், அதுப்பற்றிய கூட்டமே – அலரி மாளிகையில் இடம்பெற்றதாகவும் விபரித்தார்.

ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, எஸ்.பி திசாநாயக்க, துமிந்த திசாநாயக்க, அர்ஜூன ரணதுங்க மற்றும் ஹிருணிகா  ஆகியோரை உள்ளிடக்கிய – பலமான அணியொன்று, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜ.தே. கட்சி சார்பாக  தோ்தலில் குதிக்க உள்ளது.  இவ்விடயம் பற்றியே கலந்துரையாடினோம்.  ஜக்கிய தேசிய முன்னனி என்ற ஓர்அமைப்பை ஏற்படுத்தி,  அதனூடாக ஜ.தே.கட்சியில் அவர்களுக்கு வேட்பாளர் நியமனம் மற்றும் தேசிய பட்டியல் நியமனங்கள் வழங்குவது குறித்தும் கலந்துரையாடினோம் என்றார்.

அஸ்ரப் ஹூசைன் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி இப்தார் நிகழ்வில், ஊடகவியலாளர்கள் மற்றும் பிரமுகர்கள் என – ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்