சட்டக் கல்லூரி முஸ்லிம் மஜ்லிஸ் நிகழ்வுகளில், அமைச்சர் ஹக்கீம் பங்கேற்பு

🕔 July 10, 2015

Law callage - 001
லங்கை சட்டக்கல்லூரி – முஸ்லிம் மஜ்லிஸின் புதிய நிர்வாக அங்குரார்பண வைபவமும், வருடாந்த இப்தார் நிகழ்வும் நேற்று வியாழக்கிழமை கல்லூரியின் பிரதான  மண்டபத்தில் நடைபெற்றது.

முஸ்லிம் மஜ்லிஸின் பிரதிப் போசகர் நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமயில் நடைபெற்ற இந்நிகழ்வில் – முஸ்லிம் மஜ்லிஸின் முன்னாள் செயலாளரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம், முஸ்லிம் மஜ்லிஸின் சிரேஷ்ட பொருளாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான   எம்.யூ. அலி சப்ரி மற்றும் முன்னாள் ஓய்வு பெற்ற நீதியரசர் சலீம் மஹ்சூப் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் – மௌலவி  யஹ்யா மற்றும்  அஷாத் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்.

ஜம்மியத்துஸ் சபாப் நிகழ்வுக்கான பூரண அனுசரணையினை வழங்கியிருந்தது. Law callage - 004Law callage - 002Law callage - 003

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்