பெரோசா யானையில், மல்சா வெற்றிலையில் கெயெழுத்திட்டனர்

🕔 July 10, 2015
Ferosha - 01
– அஸ்ரப் ஏ. சமத் –

.தே.கட்சி சார்பாக, எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில்  போட்டியிடும் பொருட்டு, பெரோசா முசம்மில் – இன்று வெள்ளிக்கிழமை சிறிக்கொத்தவில் வைத்து, வேட்புமனுவில் கையெழுத்திட்டார்.

இதன்போது – பெரோசாவின் கணவரும், கொழும்பு மாநகர மேயருமான ஏ.ஜே.எம் முசம்மிலும் வருகை தந்திருந்தார்.

இதேவேளை,  முன்னாள் அமைச்சா் ஜீவன் குமாரதுங்கவின் மகளான, மேல் மாகணசபை உறுப்பினர் – மல்சா குமாரதுங்கவும் இன்று வேட்புமனுவில் கையெழுத்திட்டார்.

கொழும்பு மாவட்டத்தில் மொரட்டுவை பிரதேசத்தினை தளமாகக் கொண்டு, ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் இவர் போட்டியிடவுள்ளார்.

முன்னாள் அமைச்சா் ஜீவன் குமாரதுங்க – அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ள நிலையிலேயே, அவரின் மகள் – நாடாளுமன்றத் தேர்தலில் குதித்துள்ளார். Malsha - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்