பழைய தொழிலுக்கே போயிடுங்க; நயீமுல்லாவிடம் அசிங்கப்பட்ட, மு.கா. செயலாளர்

🕔 March 30, 2017

– அஹமட் –

மு.காங்கிரசின் தற்போதைய செயலாளர் மன்சூர் ஏ. காதர், பல்கலைக்கழக பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அது மரியாதையான தொழில். நல்ல சம்பளமும் அந்தத் தொழிலில் கிடைத்தது.

இப்போது, அவர் முஸ்லிம் காங்கிரசின் செயலாளராகப் பணி புரிகிறார். முஸ்லிம் காங்கிரசில் மன்சூர் ஏ. காதர் சம்பளம் பெறும் ஒரு செயலாளர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், மு.காங்கிரசில் இதுவரை காலமும் இருந்து வந்த செயலாளர்களுக்கு கிடைத்த மரியாதையும், இடமும் – கட்சிக்குள் மன்சூர் ஏ. காதருக்கு இல்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்

[]

மு.காங்கிரசில் ஹசனலியை வெட்டுவதற்காக, மு.கா. தலைவர் ஹக்கீம் கையிலெடுத்த கோடாரிதான் மன்சூர் ஏ. காதர். அதை விடுத்து மன்சூர் ஏ. காதரை, மு.காங்கிரசின் செயலாளராக்கி – அழகு பார்க்க வேண்டும் என்கிற, எந்தவித நேர்த்திக் கடனும் ஹக்கீமுக்குக் கிடையாது.

[]

சரி இனி மேட்டருக்கு வருவோம்.

மன்சூர் ஏ. காதர் மு.கா.வின் செயலாளர் என்றாலும், அவருக்குரிய எந்தவித வசதிகளும் கட்சிக்குள் செய்து கொடுக்கப்படவில்லை என்கிற வருத்தம் அவருக்கு உள்ளது. கட்சித் தலைவர் கூப்பிடும் நேரத்தில் அவரின் காலுக்குள் செயலாளர் மன்சூர் ஏ. காதர் நிற்க வேண்டும். ஆனால், அந்த மனிதருக்கு இதுவரையில் ஒரு ஓட்டை வண்டி கூட வழங்கப்படவில்லை.

ஹக்கீமுடைய சகோதரர் ஹஸீரின் பாவனைக்கு நீர் வழங்கல் அதிகார சபையின் வாகனம், ஹக்கீமுடைய பிரத்தியேக செயலாளரான, ஹக்கீமுடைய மச்சான் நயீமுல்லாவுக்கு, அவரின் வீட்டுக்கு, குடும்பத்தாருக்கு என்று,  ஏராளமான அரச வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், கட்சியின் செயலாளர் மன்சூர் ஏ. காதருக்கு ஹக்கீமுடைய அமைச்சிலுள்ள ஒரு வாகனத்தைக் கொடுத்தால் ஒன்றும் குறைந்து போகப் போவதில்லை என்று, மு.கா. முக்கியஸ்தர்களும் கூறுவதுண்டு.

ஆனாலும், மன்சூர் ஏ. காதருக்கு இதுவரை ஒரு வாகனத்தை வழங்க வேண்டும் என்கிற அளவுக்கு, ஹக்கீமின் மனம் இளகவில்லை.

இதனால், விரக்தியடைந்த மன்சூர் ஏ. காதர், ஒரு நாள் ஹக்கீமுடைய அமைச்சுக்குச் சென்றார். ஹக்கீமுடைய பிரத்தியேகச் செயலாளர் நயீமுல்லாவின் அறைக்குள் நுழைந்த மன்சூர் ஏ. காதர், தனது விரக்தியைக் கொட்டித் தீர்த்தார்.

“நான் பல்கலைக்கழக பதிவாளர் என்கிற பெரிய தொழிலில் இருந்தவன். சுளையாகச் சம்பளம் எடுத்தவன். பதிவாளருக்கென்று வாகனம் தந்தார்கள். எனக்கென்று ஒரு மரியாதை இருந்தது. ஆனால், மு.காங்கிரசின் செயலாளராக வந்த பிறகு, எனக்குப் பேசப்பட்ட முழுச் சம்பளம் இதுவரை கிடைக்கவில்லை.

இன்னொருபுறம், எனக்கென்று ஒரு வாகனமில்லை. பஸ்ஸில் அலைந்து திரிகிறேன்” என்று, மன்சூர் ஏ. காதர் தனது வெப்புசாரத்தினை நயீமுல்லாவிடம் கொட்டித் தீர்த்தார்.

அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த நயீமுல்லா, மன்சூர் ஏ. காதரிடம்; “அப்போ, உங்கட பழைய தொழிலுக்கே போங்களேன்” என்றாராம்.

மனுசனுக்கு வியர்த்துப் போய் விட்டதாம்.

இந்த விடயத்தை, தனக்கு நெருக்கமானவர்களிடம் மன்சூர் ஏ. காதர்தான் சொல்லி கவலைப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்