வரவு – செலவுத் திட்டம் தொடர்பில், சிரேஷ்ட அமைச்சர்கள் அதிருப்தி

🕔 November 15, 2016

budget-098ரவு செலவுத் திட்டம் தொடர்பில் சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வரவு செலவுத் திட்டத்திலுள்ள சில பரிந்துரைகள் தொடர்பில், சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட  அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் அதிருப்தி வெளியிடத் தீர்மானித்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

துறைசார் அமைச்சர்களிடம் எவ்வித அறிவுறுத்தல்களையும் பெற்றுக்கொள்ளாமல், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஏதேச்சாதிகாரமாக தீர்மானங்களை எடுத்துள்ளதாக, மேற்படி சிரேஷ்ட அமைச்சர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

துறைசார் அமைச்சர்களுக்கு எவ்வித அறிவிப்பினையும் விடுக்காமல், அமைச்சு விவகாரங்களில் தலையீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் பெரும் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்.

வரவு செலவுத்திட்டத்தில் ஊழியர் சேமலாப நிதியிணை பிணையாகக் கொண்டு கடன் பெற்றுக்கொள்ளும் முறைமை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த தீர்மானம் குறித்து, துறைசார் அமைச்சருக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அமைச்சர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, ஊழியர் சேமலாப நிதியை பிணையாக கொண்டு கடன் பெற்றுக்கொள்ளும் நடைமுறை ரத்து செய்யப்பட்டமை பற்றி தமக்கு அறிவிக்கப்படவில்லை என, தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்