ஹக்கீம் கூறிய, அந்த 07 நாட்கள் இன்றுடன் நிறைவு; அடுத்து என்ன: மக்கள் கேள்வி
இறக்காமம் – மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையினை ஒரு வாரத்துக்குள் அங்கிருந்து அகற்றுவதாக, தன்னிடம் பிரதமர் உறுதியளித்ததாக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்திருந்த காலக்கெடு இன்று 15 ஆம் திகதி செவ்வாய்கிழமையுடன் முடிவடைகிறது.
மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கடந்த 08 ஆம் திகதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் பேசியதாக மு.காங்கிரஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தது. இந்த சந்திப்பின் போது அமைச்சர் மனோ கணேசனும் மு.கா. தலைவருடன் இணைந்திருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையினை இன்னும் ஒரு வார காலத்தினுள் அகற்றுவதாக, அந்த சந்திப்பின்போது பிரதமர் தன்னிடம் உறுதியளித்திருந்ததாக, மு.கா. தலைவர் கூறியிருந்தார்.
அந்த வகையில், இன்று 15 ஆம் திகதியுடன் பிரதமர் வாக்குறுதியளித்து 07 நாட்கள் (ஒரு வாரம்) நிறைவடைகிறது.
ஆயினும், மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை, இன்னும் அங்கிருந்து அகற்றப்பட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இனி மு.கா. தலைவர் என்ன செய்யப் போகிறார் என்பதுதான் அம்பாறை மாவட்ட மக்களின் கேள்வியாகும்.