திஸ்ஸவின் பிணை மனு நிராகரிப்பு; தொடர்ந்தும் மறியலில்

🕔 November 4, 2016

thissa-attanayaka-011க்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் பிணை மனுவினை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசல வீரவர்த்தன இன்று வெள்ளிக்கிழமை நிராகரித்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தின் போது, போலியான ஆவணங்களைத் தயாரித்து, அவற்றினை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அத்தநாயக்க, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவரை, டிசம்பர் 05 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஐ.தே.கட்சியின் செயலாளராகப் பதவி வகித்த திஸ்ஸ அத்தநாயக்க, கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தின்போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, அப்போதைய அரசாங்கத்தில் அமைச்சர் பதவியொன்றினையும் பெற்றுக் கொண்டார்.

இந்தக் காலப்பகுதியில், அப்போதைய பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டதாகத் தெரிவித்து, ஆவணமொன்றினை திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்டிருந்தார்.

இந்த ஆவணம் போலியானதெனக் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்