மத்திய வங்கியில் இடம்பெற்றதை விடவும், பாரிய ஊழலா செய்து விட்டேன்: நாமல் விசனம்

🕔 November 4, 2016

Namal - 0865நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்றுமுன் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

விசாரணைப் பிரிவில் ஆஜராகுவதற்கு முன்னதாக, ஊடகங்களிடம் பேசிய அவர்; “மத்திய வங்கியில் இடம்பெற்ற 125 பில்லியன் ரூபா மோசடியை விடவும், அனுமதிப்பத்திரத்துடன் நான் வாகனம் கொண்டு வந்ததுதான் பாரிய ஊழலா” என கேள்வி எழுப்பினார்.

“தற்போது விசாரணைகளுக்காக செல்கின்றேன். வந்து மிகுதி கருத்தை கூறுகின்றேன், ஒரு வேளை என்னை கைது செய்தால் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கின்றேன்” எனவும் கூறினார்.

மேலும், 125 பில்லியன் ரூபா மோசடி செய்த அர்ஜூன மகேந்திரனை விட்டுவிட்டு வாகன கொள்வனவுக்காக தன்னை விசாரணைக்கு அழைத்துள்ளமையினை இதன்போது நாமல் கடுமையாக சாடினார்.

குறித்த விசாரணைகளுக்காக நாமல் தனியாகவே வந்திருந்தார். தன்னை கைது செய்தாலும் செய்யலாம். அவ்வாறு கைது செய்தால் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கின்றேன் என கூறி விசாரணைகளுக்காக சென்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்