மின்சார சபை துணைக் காரியாலயத்தை, இறக்காமத்தில் அமைக்குமாறு பொறியியலாளர் மன்சூர் கோரிக்கை

🕔 September 8, 2016

s-i-mansoor-0112
-றிசாத் ஏ காதர் –

லங்கை மின்சார சபையின் துணைக் காரியாலம் ஒன்றினை இறக்காமத்தில் அமைக்குமாறு, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும், தேசிய காங்கிரசின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார்.

அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், நேற்று புதன்கிழமை அம்பாறை மாவட்ட கச்சேரியில் நடைபெற்றது.

அமைச்சர் தயா கமகே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஐ.எம். மன்சூர், ஏ.கே. கோடீஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோரின் இணைத் தலைமையில் மேற்படி அபிவிருத்திக் கூட்டம் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் பொறியியலாளர் மன்சூர் மேற்படி விடயத்தினை சுட்டிக் காட்டினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

இறக்காமம் குளத்தாவடி தொடக்கம் மாணிக்க மடு வரையும், இறக்காமம் சந்தியிலிருந்து வரிப்பத்தான்சேனை வரையும் கார்ப்பட் வீதி அமைக்க வேண்டிய தேவை தொடர்பில் வலியுறுத்தினார்.

இறக்காமல் றோயல் கனிஷ்ட கல்லூரியில் அரைகுறையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள  கட்டிடம் தொடர்பாகவும், இதனால் பாடசாலை மாணவர்களுக்குள்ள ஆபத்துகள் குறித்தும் இதனை வெகு விரைவில் முடிக்க வேண்டிய தேவைபற்றியும் மன்சூர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இறக்காமம் பொது விளையாட்டு மைதானத்துக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான இடம் இன்மையால் அந்நிதி திரும்பிவிடும் நிலை ஏற்பட்டுள்ளமை குறித்து இங்கு அவர் கவலை வெளியிட்டார்.

இதேவேளை, இறக்காமம் பிரதேச விவசாய நீர்பாசன மூலங்களின் திருத்தம், கல்வெட்டுக்களை புனர்நிர்மானம் செய்ய வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இப்பிரதேசத்தில் – யானைகளால் மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் தொடர்பாகவும், யானை வேலிகள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் பொறியிலாளர் மன்சூர் சுட்டிக் காட்டினார்.

அடிப்படைத் தேவைகளான குடிநீர், மின்சாரம் மற்றும் மலசலகூட வசதிகள் இல்லாமல், இறக்காமம் நியுகுண மக்கள் எதிர்கொள்ளும் அவஸ்தை வாழ்வு தொடர்பிலும் இங்கு அவர் விபரித்தார்.

இறக்காமம் ஓட்டுத் தொழிற்சாலை அருகிலுள்ள பாலம் வழியாக இயந்திரங்கள் மூலம் மணல் கொண்டு செல்வோரிடம் பணம் அறவிடப்படுதல் பற்றியும், பொறியியலாளர் மன்சூர் இங்கு விசனம் தெரிவித்தார்.dcc-ampara-011

Comments

புதிது பேஸ்புக் பக்கம்