‘பட்டை’ வியாபாரத்தில் பொலிஸ் அதிகாரி; மாறுவேடத்தில் சென்றவர்களிடம் மாட்டினார்

🕔 August 18, 2016

Wallapatta - 0111ல்லப்பட்டையை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சித்த,   பொலிஸ் அதிகாரி ஒருவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால், மாறுவேடத்தில் சென்ற பொலிஸாருக்கே, வல்லப்பட்டயினை குறித்த பொலிஸ் அதிகாரி விற்பனை செய்ய முயற்சித்துள்ளார்.

வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலிந்தநுவர காட்டுப் பகுதியில் வெட்டப்பட்ட ஒன்றரை கிலோ கிராம் வல்லப்பட்டையினை இவர் விற்பனை செய்ய முயற்சித்தார்.

மத்துகம பிரதேசத்தில் வைத்து வல்லப்பட்டை விற்பனை செய்ய முயற்சித்த போது, களுத்துறை மோசடி தவிர்ப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள், குறித்த அதிகாரியையும் அவரது சகோதரர் உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரான பொலிஸ் அதிகாரியின் சகோதரர் ராணுவச் சிப்பாய் என்பது குறிப்பிடத்தக்கது.

அலுத்கம பிரதேச வர்த்தகர் ஒருவருக்கு, குறித்த வல்லப்பட்டையை 17 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது.

இந்த கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ள, சில நாட்கள் முகவர்கள் ஊடாக முயற்சிக்கப்பட்டது.

இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்ட வர்த்தகர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வல்லபட்டையை வாங்குவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மாறுவேடமிட்டு சென்றுள்ளனர்.

சந்தேக நபர்கள் நேற்று புதன்கிழமை மத்துகம நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்