மத்தல விமான நிலையம் தொடர்பில் அமைச்சர் ஹக்கீம், துருக்கி அதிகாரிகளுடன் பேச்சு

🕔 February 6, 2016

Hakeem - Turkey - 01
– ஷபீக் ஹுசைன் –

த்தல சர்வதேச விமான நிலையத்தை, துருக்கி விமான சேவையின் விமானங்களை பராமரிக்கும் மையமாக செற்படுத்துவற்கான பேச்சுவார்த்தையொன்றில் அமைச்சரும் மு.கா. தலைவருமான ரஊப் ஹக்கீம், துருக்கி எயார்லைன்ஸ் பிரதி தவிசாளர் டொக்டர் டேமல் கொடிலுடன் ஈடுபட்டார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட பிரதிதியாக அமைச்சர் ஹக்கீம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை துருக்கி நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டார்.

மேலும், துருக்கி மற்றும் இலங்கை விமான சேவைகளை இணைத்து சேவையொன்றினை வழங்குவது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

துருக்கி எயார்லைன்ஸ் பிரதித் தவிசாளர் டொக்டர் கொடில் இந்த விடயங்களை முழு மனதுடன் வரவேற்றதுடன், இவை தொடர்பாக கலந்துரையாடுவதற்கு குழுவொன்றினை அமைப்பதோடு, இலங்கை விமான சேவையின் அதிகாரிகளை துருக்கி நாட்டிற்கு அழைப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், துருக்கி நாட்டுக்கு சேவையை வழங்கும் பயன முகவர் நிலையங்களுக்கான பயிற்சிகளை நடத்துவதற்கும் டொக்டர் கொடில் உடன்பட்டார்.

இதற்காக, அமைச்சர் ஹக்கீம் நன்றி தெரிவித்ததோடு, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சு, திணைக்களங்களுடன் கலந்துரையாடி மேற்கோள்ளப்படும் முடிவுகளை, முன்கொண்டு செல்வதாக கூறினார்.

அமைச்சர் ரஊப் ஹக்கீம், இலங்கை தேயிலைக்கான துருக்கி சந்தையை விருத்தி செய்வது தொடர்பாகவும் வர்த்தக மேம்படுகள் குறித்தும் இந்த விஜயத்தின் போது பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்