கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நூலகங்களுக்கு, ஆசிய மன்றம் புத்தகங்கள் அன்பளிப்பு

🕔 January 16, 2019
– அஸ்லம் எஸ். மௌலானா-

ல்முனை மாநகர சபைக்குட்பட்ட பொது நூலகங்களுக்கு ஆசிய மன்றத்தினால் பெறுமதி வாய்ந்த புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இந்த நூல்கள் வழங்கப்பட்டன.

இவற்றைக் கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை மாலை கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது.

மாநகர முதல்வர் ஏ.எம். றகீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிய மன்றத்தின் புத்தகங்கள் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் அன்டன் டி. நல்லதம்பி பிரதம அதிதியாக கலந்து கொண்டு, கல்முனை மாநகர சபைக்குட்பட்ட 07 நூல் நிலையங்களுக்குமான நூல்களை அவற்றின் நூலகர்களிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி. அன்சார், பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், ஆசிய மன்றத்தின் நிபுணத்துவ ஆலோசகர் எம்.ஐ.எம். வலீத், கல்முனை டெலிகொம் முகாமையாளர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது ஆசிய மன்றத்தின் புத்தகங்கள் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் அன்டன் டி. நல்லதம்பியை, கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்