மஹிந்தவுக்கு கோட்டா வாழ்த்து; புதிய இலங்கையை கட்டி எழுப்புவோம் எனவும் தெரிவிப்பு

🕔 October 26, 2018

– புதிது செய்தியாளர் –

பிரதமராகப் பதவியேற்றுள்ள தனது மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தனது ‘டவிட்டர்’ பக்கத்தில் இந்த வாழ்த்தினை கோட்டா வெளியிட்டுள்ளார்.

பெருமையுடனும், சந்தோசத்துடனும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ,  நிலையானதும் முற்போக்கானதுமான இலங்கையொன்றைக் கட்டியெழுப்புவதற்கு நாம் இணைந்து பணியாற்றுவோம் என்றும்,  தனது ‘ட்விட்டர்’ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்