கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில், பொலிஸ் உத்தியோகத்தர் பலி: மாத்தறையில் சம்பவம்

🕔 June 22, 2018

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் – மாத்தறை நகரத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியானார்.

மாத்தறை நகர பிரதேசத்தில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையமொன்றில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது, பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது.

இதரன்போது  துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேவேளை பொலிஸார் நடத்திய தேடுதலின் போது, தப்பிச்சென்ற கொள்ளையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர் சாமர இந்திரஜித் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர்  சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி எனக் கூறப்படுகிறது.

ஏனைய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என்றும், அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் நடைபெறுவதாகவும் தெரியவருகிறது.

Comments