கோட்டா ஒரு பொய்யர்; சொத்துக்களை அம்பலப்படுத்தியது ஆங்கில ஊடகம்

🕔 May 27, 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கதிர்காமத்தில் அவரின் பெயரில் சொகுசு விடுதியொன்று இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தனது மனைவியின் உடஹமுல்லவில் அமைந்திருக்கும் வீட்டைத் தவிர்த்து தனக்கு வேறெந்த சொத்துக்களும் இலங்கையில் இல்லை என, கோட்டா தெரிவித்துவரும் நிலையிலேயே, கதிர்காமத்தில் சொகுசு விடுதி உள்ள செய்தி வெளியாகியுள்ளது.

ராணுவ வீரர்களைக் கொண்டு மேற்படி சொகுசு விடுதியை கோட்டா அமைத்தார் என தெரிவியவருகிறது.

இது தொடர்பான செய்தியை ஆங்கில இணையத்தளமொன்று; ‘கோட்டாபய ஒரு பொய்யர். அவருக்கு நாடுமுழுவதிலும் சொகுசு விடுதிகள் உள்ளன’ என தலைப்பிட்டு வெளியிட்டுள்ளது.

மேலும், அந்த செய்தியில்  முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரில் குறித்த சொகுசு விடுதிக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ள நீர் கட்டணமும் இணைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த கோட்டாபாய ராஜபக்ஷ; “எனது மனைவியின் பெயரில் உள்ள வீட்டைத் தவிர்த்து, எனது பெயரில் சொத்துக்கள் எவையேனும் இருந்தால் நிரூபித்துக்காட்டுங்கள்” என சவால்விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்