நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு; பிரேரணையின் பின்னணியில் ரணில்: பிவிதுரு ஹெல உறுமய குற்றச்சாட்டு

🕔 April 24, 2018

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை ஒழிக்க வேண்டும் என்கிற, ஜே.வி.பி.ன் பிரேரணையின் பின்னணியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருக்கின்றார் என்று, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் செயலாளர் உபுல் விஜேசேகர தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் நேற்று திங்கட்கிழமை கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இதனைக் கூறினார்.

அதேவேளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை ஒழிக்க வேண்டும் என்கிற பிரேரணையை தாம் எதிர்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை ஒழிப்பதன் மூலம், அதிகாரங்களை தன்னை மையப்படுத்திக் கொண்டுவருவதற்கு ரணில் விக்ரமசிங்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

அவ்வாறு ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிகாரம் கிடைக்கும் போது, அவர் வெளிநாடுகளின் விருப்பப்படி நாட்டைக் கொண்டு செல்வார் எனவும் உபுல் விஜேசேகர தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்