அனுமதி வழங்கப்பட்ட 1300 பிஸ்டல்கள், பொதுமக்களிடம் உள்ளன: பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவிப்பு

🕔 March 16, 2018

னுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட 1300 பிஸ்டல் கைத்துப்பாக்கிகள் பொதுமக்களிடம் உள்ளன என்று, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் என்.டி. பண்டிதரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக 19,000 துப்பாக்கிகள் விவசாய நோக்கத்துக்காக வழங்கப்பட்டிருந்தன என்றும் அவர் கூறியுள்ளார். இவற்றில் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு அரசாங்கம் அறிவித்திருந்த பொதுமன்னிப்பு காலப்பகுதியில், 1000க்கும் அதிகமான துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டன எனவும் அவர் விபரித்தார்.

இதேவேளை, 2018ஆம் ஆண்டுக்கான அனுமதியினைப் புதுப்பிக்காமல் ஒரு தொகை துப்பாக்கிகள் உள்ளன என்றும், மார்ச் மாதத்துக்குள் அவற்றுக்கான அனுமதி புதுப்பிக்கப் பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில், தென் மாகாண சபை உறுப்பினரும் அவரின் மனைவியும், பஸ் சாரதி ஒருவரைத் தாக்கும் போது வைத்திருந்த கைத்துப்பாகியும் 2018ஆம் ஆண்டுக்குரிய அனுமதியைப் பெற்றுக் கொள்ளாதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்