பிரித்தானிய இளவரசர் ஹரி – அமெரிக்க நடிகை மார்க்கெல், திருமண தினம் அறிவிப்பு

🕔 December 17, 2017

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவருடைய காதலி மெக்கன் மார்க்கெல் ஆகியோரின் திருமணம் அடுத்த வருடம் மே மாதம் 19ஆம் திகதி நடைபெறும் என, கென்சிங்டன் அரண்மனை அறிவித்துள்ளது.

இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த மாதம் நடந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹரி திருமணம் செய்துகொள்ளவுள்ள அவரின் காதலி, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நடிகையாவார்.

அரச குடுத்பத்தின் திருமண நிகழ்வுகள் வார நாட்களில் நடைபெறுவது சம்பிரதாயமாகும். ஆனாலும், அதற்கு மாற்றமாக சனிக்கிழமையன்று தமது திருமணத்தை நடத்துவதற்கு, ஹரி –  மெக்கன் மார்க்கெல் ஜோடியினர் தீர்மானித்துள்ளனர்.

இவர்களின் திருமணம், மேற்கு லண்டனிலுள்ள வின்ட்சர் அணைமனையின் புனித ஜோர்ஜ் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.

இளவரசர் ஹரியின் பாட்டியாரான 91 வயதுடைய எலிசபெத் மகாராணியாரும், இந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.

இளவரசர் ஹரி, பிரித்தானியாவின் 05ஆவது முடிக்குரிய இளவரசராவார்.

Comments