க.பொ.த. சாதாரணதர பரீட்சை ஆரம்பம்; மழையினூடே சென்றனர் மாணவர்கள்

🕔 December 6, 2016

exam-022.பொ.த. சாதாரண தரப் பரீட்சை இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கு அமைய, நடைபெறும் இந்தப் பரீட்சையானது, எதிர்வரும் 17 ஆம் திகதி நிறைவடையும்.

இதில் சுமார் 07 லட்சம் பரீட்சார்த்திகள் தோன்றுகின்றனர். இதற்காக 65 ஆயிரத்து 524 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, நாடு முழுவதிலும் உள்ள 5669 பரீட்சை நிலயங்கள் இதற்காக ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கையடக்கத் தொலைபேசி மற்றும் ஸ்மார்ட் கைக்கடிகாரம் ஆகியவற்றை பரீட்சை மண்டபத்துக்குள் வைத்திருக்கும் பரீட்சார்த்திகளின் பரீட்சை அனுமதி ரத்து செய்யப்படும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், அவ்வாறான பரீட்சார்திகளுக்கு ஐந்து வருடங்களுக்கு பரீட்சைத் தடையும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம், கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் மழை பெய்த நிலையில், பரீட்சார்த்திகள் தமது பரீட்சை நிலையங்களுக்குச் சென்றமையினைக் காணக் கூடியதாக இருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்