தமிழ் பொலிஸார் பதவி விலக வேண்டும்: பிரபாகரன் படை எச்சரிக்கை

🕔 October 31, 2016

letter-0123ட மாகாணத்தில் கடமையாற்றும் அனைத்து தமிழ் பொலிஸாரும் தங்கள் பதவிகளிலிருந்து விலக வேண்டுமென அச்சுறுத்தப்பட்டுள்ளது.

‘பிரபாகரன் படை’ எனும் பெயரில் எழுதப்பட்ட கடிதமொன்றினூடாக, இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில், யாழ்ப்பாண மாணவர்களின் மரணம் தொடர்பில் சட்டத்தை செயற்படுத்தும் வரையில், தமிழ் பொலிஸார் தற்காலிகமாக தங்கள் பதவியில் இருந்து விலக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வடக்கு மாகாணத்தின் பொலிஸ் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் சேவை செய்யும் தமிழ் அதிகாரிகளை வேறு பிரதேசங்களுக்கு மாற்றுமாறும் குறித்த கடிதத்தில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக 21 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் இந்த கடிதத்தை அனுப்பி வைத்தது யார் என்பது தொடர்பில் பொலிஸ் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

அண்மையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தின் பின்னர், வடமாகாணத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. ஏற்கனவே, சுன்னாகம் பகுதியில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுக்கு உரிமை கோரி ‘ஆவா குழு’ பெயரில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டிருந்தது.

‘பிரபாகரன் படை’ எனும் பெயரில் இந்தக் கடிதம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.letter-0124

Comments

புதிது பேஸ்புக் பக்கம்