Back to homepage

கட்டுரை

இனவாதம் எனும் ஆபத்தான மிருகம்

இனவாதம் எனும் ஆபத்தான மிருகம்

இனவாதம் என்பது புத்தியில்லாததோர் ஆபத்தான மிருகமாகும். ஒரு வீட்டு நாயைப் போல அதைப் பழக்கி வைத்திருந்தாலும், ஒரு கட்டத்தில் அந்த மிருகமானது, வசப்படுத்தி வைத்திருந்தவனையே வேட்டையாடிக் கொன்று விடும். இனவாதம் எனும் மிருகத்துக்கு பசி வந்து விட்டால், பிறகு நம்மாள் பிறத்தியாள் என்கிற வித்தியாசமெல்லாம் அதற்குத் தெரிவதில்லை. இதற்கு அண்மைய உதாரணம், மஹிந்த ராஜபக்ஷ. இனவாதத்தை

மேலும்...
ஜெமீல்: இருக்கு ஆனால் இல்லை

ஜெமீல்: இருக்கு ஆனால் இல்லை

திருமணமொன்று விவாகரத்தில் முடியும்போது, மனைவியிடமிருந்து கணவர் சட்ட ரீதியாகப் பெற்றுக் கொண்ட சொத்துக்கள் அனைத்தையும் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். மனைவி வேண்டாம், ஆனால், அவரிடமிருந்து பெற்றுக் கொண்ட எதையும் திருப்பிக் கொடுக்க மாட்டேன் என்று கூற முடியாது. அப்படிச் சொல்வது வெட்கக்கேடான விடயமாகவும் பார்க்கப்படும். இதுபோல, முஸ்லிம் காங்கிரசுக்கும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெமீலுக்கும்

மேலும்...
குடும்பத் தேர்தல்

குடும்பத் தேர்தல்

ஆட்சி மாற்றம் என்பது நாட்டு மக்களுக்கு மனதளவில் பாரிய நிம்மதியைக் கொடுத்திருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத சிறைகளுக்குள் சிக்கியிருந்தமை போன்றை மனநிலை இப்போது இல்லை. கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்துக்குப் பிறகு, ஜனநாயகத்தின் ருசியை, நாட்டு மக்கள் அனுபவிக்கத் தொடங்கியிருக்கின்றனர். ஆட்சி மாற்றம் என்பது இன்னும் முழுமையடையவில்லை. நாடாளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் என்று, நாட்டில்

மேலும்...
தீராத தலைவலி

தீராத தலைவலி

தலைவலி என்பதற்கு மறுபெயராக மு.காங்கிரசின் கையிலிருக்கும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் மாறியிருக்கின்றன. இந்தத் தேசியப்பட்டியல் என்கிற விவகாரத்தால் கட்சியின் தலைவருக்கு, தொண்டர்களுக்கு, ஆதரவாளர்களுக்கு, இந்தப் பதவிகளை இப்போது தற்காலிகமாக வைத்திருப்பவர்களுக்கு என, எல்லோருக்குமே தலைவலிதான். இன்னுமொரு தரப்பாரும் இருக்கிறார்கள். அவர்கள் – இந்தப் பதவியைக் குறிவைத்துக் காத்திருப்பவர்கள். அந்தத் தரப்பாருக்கு இப்போது ஏகப்பட்ட தலைவலி.

மேலும்...
அஷ்ரப் என்கிற முகவரி

அஷ்ரப் என்கிற முகவரி

”முஸ்லிம் காங்கிரசின் மூத்த துணைத் தலைவராக இருந்த, மருதூர் கனியின் தாயாருடைய 40 ஆம் கத்தம் (நினைவு நாள்) கொழும்பில் நடந்தது. அதில், மு.காங்கிரசின் தலைவர் அஷ்ரப் அவர்களுடன் நானும் கலந்து கொண்டேன். அந்த நிகழ்வு முடிந்தவுடன் அன்றிரவே தலைவருடன், அவரின் கம்பளை வீட்டுக்கு வந்தோம். அன்றைய தினம் அங்கு தங்கிவிட்டு, மறுநாள் அம்பாறை நோக்கி

மேலும்...
ஒலுவில்: அடுத்து என்ன ??

ஒலுவில்: அடுத்து என்ன ??

ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டதன் பின்னர், கடந்த 04 வருடங்களாக ஒலுவில் பிரதேச கரையோரம் கடலரிப்பால் பாரதூரமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இவ் வாரம் ஏட்டிக்குப் போட்டியாய் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களான அமைச்சர்களின் களவிஜயங்கள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக, ஏதோ நடக்கப் போவது போல், ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுளளது. எனவே, இது தொடர்பான விழிப்புணர்வு கருதியும்,

மேலும்...
தேசிய அரசாங்கமும், அப்பிராணித்தனமான நம்பிக்கைகளும்

தேசிய அரசாங்கமும், அப்பிராணித்தனமான நம்பிக்கைகளும்

தேசிய அரசாங்கமொன்று அமைந்து விட்டது. இது – நாட்டிலுள்ள எல்லா என மக்களும் இணைந்து அமைத்துள்ள ஆட்சியாகும். அமைச்சரவையில் ஐந்து முஸ்லிம்கள், சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவர் பதவி என்று – பார்ப்பதற்கும் கேட்பதற்கும் சந்தோசமான நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன. இந்த நல்லாட்சி தொடர வேண்டும் என்பதுதான் நமது விருப்பமாகும். ஆனால், சிறுபான்மை சமூகங்களுக்கு, இந்தத் தேசிய

மேலும்...
வளைகுடா நாடுகள், ஏன் சிரியர்களை ஏற்பதில்லை?

வளைகுடா நாடுகள், ஏன் சிரியர்களை ஏற்பதில்லை?

சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கட்டார், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய வளைகுடா நாடுகள், ஏன் சிரியர்களை ஏற்பதில்லை என்பதற்கான காரணிகளை ஆராய்கிறார், தோஹாவிலுள்ள ‘ராயல் யுனைட்டட் சர்வீஸ் இன்ஸ்டிடியூட்’டைச் சேர்ந்த மத்திய கிழக்கு ஆய்வாளர் மைக்கெல் ஸ்டீபன்ஸ் பல்வேறு நாட்டு எல்லைகளிலும், ரயில் நிலையங்களிலும் சிரிய அகதிகள் சிக்கித்தவிக்கும் காட்சிகள்; அதிலும்

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸும், ‘மொனொபொலி’ அரசியலும்

முஸ்லிம் காங்கிரஸும், ‘மொனொபொலி’ அரசியலும்

கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்பார்கள். எதிர்க்கடை இல்லாத கீரைக்கடை இருப்பது நுகர்வோனுக்கு நல்லதல்ல. அந்த நிலைவரமானது, கீரைக்கடை முதலாளிக்கு சந்தையில் ‘ஏகபோக’ உரிமையினை ஏற்படுத்தி விடும். இதைத்தான் ஆங்கிலத்தில் ‘மொனொபொலி’ (Monopoly) என்கிறார்கள். எதிர்க்கடையில்லாத கீரைக் கடைக்காரர் நேர்மையானவராக இருந்தால் பிரச்சினையில்லை. சிலவேளை, அந்தக் கடையில் மோசமானதொரு முதலாளி உட்கார்ந்திருந்தால், நுகர்வோனின் நிலைமை பரிதாபகரமானதாக

மேலும்...
அதாஉல்லா: கலைத்து விடப்பட்ட கோலம்

அதாஉல்லா: கலைத்து விடப்பட்ட கோலம்

‘நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்து விடும். கிடைக்கும் என்பார் கிடைக்காது, கிடைக்காதென்பார் கிடைத்து விடும்’ என்று, தாயைக் காத்த தனயன் திரைப்படத்தில் ஒரு பாடல் இருக்கிறது. கவியரசர் கண்ணதாஸன் அந்தப் பாடலுக்குச் சொந்தக்காரர்.ஆயிரத்தெட்டு எதிர்பார்ப்புகள், எதிர்வு கூறல்கள், அனுமானங்களுக்கு மத்தியில் நடந்து முடிந்திருக்கிறது நாடாளுமன்றப் பொதுத் தேர்தல். நடக்கும் என்று நாம் எதிர்பார்த்த எத்தனையோ

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்