காவியை மறைக்கிறதா நீதி; விசாரிக்கப்பட வேண்டிவர், விஜேதாஸ ராஜபக்ஷ

🕔 June 21, 2017

– அ. அஹமட் –

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்விஷன் மிக நெருங்கிய சகாவாக, சில நாட்களுக்கு முன்னர், மலித் விஜயநாயக்க என்ற நபர் தன்னை  வீடியோ மூலம் அறிமுகப்படுத்திக் கொண்டார். பொதுபல சேனா அமைப்பை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ வழி நடாத்திச் செல்கிறார் என்னும், அதற்கு தானே ஆதாரம் எனவும் கூறி அவர் அந்த வீடியோவில் கூறினார்.

நீதி அமைச்சர் என்ற உயரிய அந்தஸ்தில் உள்ளவரை யாரோ ஒருவர் சொல்வதற்காக விசாரணை செய்ய முடியாது. இருந்தாலும் குறித்த நபர் முன்வைக்கும் குற்றச் சாட்டும் அவர் தன்னை அறிமுகம் செய்யும் முறைமையும் அக் குற்றச்சாட்டு விசாரிக்கப்படல் வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

பொதுபலசேனா மீது இலங்கை அரசு நீதியை நிலைநாட்ட தவறியுள்ளது என்ற மிகப் பெரும் குற்றச்சாட்டு உள்ளது. இந் நிலையில், நீதி அமைச்சர்தான் பொதுபல சேனாவை இயக்குகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைப்பதானது அவ்வளவு சிறிய விடயமுமல்ல. இது இலங்கை நீதித் துறையின் செயற்பாட்டையே கேள்விக்குட்படுத்துகிறது. இப்படி பாரதூரமான செய்தியை வெளியிட்ட குறித்த நபர் உடனடியாக விசாரணை செய்யப்படல் வேண்டும்.

அவர் இதுவரை காலமும் விசாரணை செய்யப்படாமையானது இலங்கையின் முக்கிய புள்ளிகள்தான், பொது பல சேனாவின் பின்னால் உள்ளார்கள் என்பதை மேலும் உறுதி செய்வதோடு, அவரது குற்றச்சாட்டில் உண்மைகள் இல்லாமலுமில்லை என்ற விடயத்தையும் கூறிச் செல்கிறது.

அண்மையில், ஞானசார தேரரை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்தாஷன் கைது செய்யாமல் தடுக்கின்றார் என்ற குற்றச்சாட்டை அசாத்சாலி –  முன் வைத்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது நீதியமைச்சர் மீது எழும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் அதனை மேலும் உறுதி செய்வதோடு, குறித்த குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்