புலிகளின் ஆயுதங்கள், முஸ்லிம்கள் வசம்; பிரசாரத்தின் பின்னணி பற்றி ஆராய வேண்டும்

புலிகளின் ஆயுதங்கள், முஸ்லிம்கள் வசம்; பிரசாரத்தின் பின்னணி பற்றி ஆராய வேண்டும் 0

🕔19.Aug 2018

புலிகளிடமிருந்த அனைத்து ஆயுதங்களும் முஸ்லிம்கள் வசமே இருப்பதாகவும், இதனை வைத்துக்கொண்டே அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஹிஸ்புல்லா ஆகியோர் அரசாங்கத்தை அச்சுறுத்தவும், அடிபணியவைக்கவும் முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரின் கருத்துக்கள் தொடர்பில், அரசாங்கம் ஆழமான பார்வையுடன் அக்கறை செலுத்தி, உரிய விசாரணை நடாத்தி உண்மை நிலையை கண்டறிய வேண்டுமென  அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் 

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா; உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக மஹிந்த தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா; உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக மஹிந்த தெரிவிப்பு 0

🕔19.Aug 2018

இரண்டு தடவை ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர், அரசியலமைப்பின் 19ஆவது  திருத்தத்துக்கு அமைய மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது தொடர்பில், உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை தான் கோர எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிலியந்தலை பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே முன்னாள்

மேலும்...
ஊடகவியலாளர் கீத் நொயார், கடத்தி வைக்கப்பட்டிருந்த இடம் அம்பலம்

ஊடகவியலாளர் கீத் நொயார், கடத்தி வைக்கப்பட்டிருந்த இடம் அம்பலம் 0

🕔18.Aug 2018

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு புலனாய்வுத் துறை அதிகாரியொருவரின் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக, பொலிஸ் வட்டார தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. அத்துடன், அந்த இடம் தொம்பே பதுவத்த வலவ்வ என்ற பெயரில் அழைக்கப்படுவதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டதன் பின்னர் சிரேஷ்ட ஊடகவியலாளர் லலித் அலஹகோன் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தொடர்பை மேற்கொள்ள

மேலும்...
1990 இனச்சுத்திகரிப்பு; ‘ஜப்னா முஸ்லிம்’ நடத்தும் கட்டுரைப் போட்டி: ஒரு லட்சம் ரூபா பரிசுகள்

1990 இனச்சுத்திகரிப்பு; ‘ஜப்னா முஸ்லிம்’ நடத்தும் கட்டுரைப் போட்டி: ஒரு லட்சம் ரூபா பரிசுகள் 0

🕔17.Aug 2018

யாழ்ப்பாணம் அடங்கலான வடக்கு முஸ்லிம்கள், தமது பாரம்பரிய தாயகத்திலிருந்து, பாசிசப் புலிகளால் 1990 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டமையை ஆவணப்படுத்தும் நோக்குடன், மாபெரும் கட்டுரைப் போட்டியொன்றை ‘ஜப்னா முஸ்லிம்’ இணையத்தளம் நடத்தவுள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய தாயகம், 1990 இனச்சுத்திகரிப்பு, அதற்கு பிந்திய நிலை மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை கட்டுரை

மேலும்...
அமைச்சர் றிசாட் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கையில் திருத்தம்

அமைச்சர் றிசாட் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கையில் திருத்தம் 0

🕔17.Aug 2018

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை வெளியான டெய்லி மிரர், லங்கா தீப பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் தொடர்பாக அமைச்சின் மேலதிகச் செயலாளர் ரி.டி.எஸ்.பி. பெரேரா திருத்தமொன்றை வெளியிட்டுள்ளார். அமைச்சர் ரிஷாட்டின் வாகனப் பாவனை தொடர்பாக, தரிந்து ஜெயவர்தன என்பவரால் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விபரங்களைக் கோரியிருந்தார். இதற்கமைய

மேலும்...
உலகில் மிகப் பெரிய ஸ்ரோபரி பீட்ஸா: நுவரெலியாவில் தயாரிப்பு

உலகில் மிகப் பெரிய ஸ்ரோபரி பீட்ஸா: நுவரெலியாவில் தயாரிப்பு 0

🕔17.Aug 2018

– க. கிஷாந்தன் – உலகில் மிக பெரிய ஸ்ரோபெரி பீட்ஸாவை தயாரிக்கும் முயற்சி, நுவரெலியாவில் இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இந்த ஸ்ரோபெரி பீட்ஸா தயாரிப்புக்காக 200 கிலோகிராம் ஸ்ரொபெரி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஸ்ரோபெரி பீட்ஸாவின் முழு எடை 1400 கிலோகிராமாகும். குறித்த பீட்ஸாவை 6000 பேருக்கு பகிர்ந்தளிக்க முடியும் என்று, இதனை தயாரித்த

மேலும்...
குடும்ப உறுப்பினர்களைத் தவிர, வேறெவரையும் ஜனாதிபதி வேட்பாளராக, மஹிந்த களமிறக்க மாட்டார்

குடும்ப உறுப்பினர்களைத் தவிர, வேறெவரையும் ஜனாதிபதி வேட்பாளராக, மஹிந்த களமிறக்க மாட்டார் 0

🕔16.Aug 2018

தனது குடும்ப உறுப்பினர்களை தவிர, பொது எதிரணியிலுள்ள வேறெவரையும் ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷ முன்னிலைப்படுத்த மாட்டார் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுசெயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளராக  பொது எதிரணியினர் சார்பில் யாரை முன்னிலைப்படுத்துவது என்பது தொடர்பில், அக்கட்சியில் தற்போது கருத்து முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளதாகவும் அவர் கூறினார். குடும்ப ஆட்சியை மீண்டும்

மேலும்...
இழந்து விட்ட அரசியல் ஓர்மம்

இழந்து விட்ட அரசியல் ஓர்மம் 0

🕔15.Aug 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – தேர்தலொன்று விரைவில் வரப்போகிறது போல் தெரிகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் ஊர்களுக்குள் அடிக்கடி வந்து போகின்றமை அதற்கான கட்டியமாகும். குறிப்பாக, முஸ்லிம் கட்சித் தலைவர்கள், ‘மடித்து’க் கட்டிக் கொண்டு, களத்தில் இறங்கி விட்டார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், அம்பாறை மாவட்டத்துக்கும், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா, திருகோணமலை மாவட்டத்துக்கும்

மேலும்...
சில அரசியல்வாதிகள், அதிகாரிகளை அச்சுறுத்துகின்றனர்: அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு

சில அரசியல்வாதிகள், அதிகாரிகளை அச்சுறுத்துகின்றனர்: அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு 0

🕔15.Aug 2018

பேரினக்கட்சிகளில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகள் சிலர், தமது கட்சித் தலைவர்களின் பெயரைப் பயன்படுத்தி, அதிகாரிகளை அச்சுறுத்தி தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசியல் இருப்பு மற்றும் எதிர்காலத் தேர்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டே, அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அவற்றில் மக்கள் நலன் இருப்பதாகத்

மேலும்...
சம்மாந்துறை பிரதேச சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சம்மாந்துறை பிரதேச சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 0

🕔14.Aug 2018

– யூ.எல்.எம். றியாஸ் –சம்மாந்துறை பிரதேச சபையில் கடைமையாற்றும் தற்காலிக ஊழியர்கள் இன்று செவ்வாய்கிழமை கறுப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக தற்காலிகமாக வேலை செய்யும் 61 ஊழியர்களும் இருக்கத்தக்கதாக, புதிதாய் இப்பிரதேச சபைக்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டமையைக் கண்டித்தும், ஐந்து வருடங்களுக்கு மேலாக, தற்காலிகமாக வேலை செத்துவருகின்ற சிற்றூழியர்கள், சுகாதார

மேலும்...
இந்த ஆட்சியில்தான் அதிகளவு நீர்வழங்கல் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன: ஹக்கீம் தகவல்

இந்த ஆட்சியில்தான் அதிகளவு நீர்வழங்கல் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன: ஹக்கீம் தகவல் 0

🕔14.Aug 2018

கடந்த காலங்களில் எந்த அரசாங்கமும் செய்யாத வகையில், இந்த ஆட்சியில் பாரியளவிலான குடிநீர் வழங்கல் திட்டங்களை அமுல்படுத்தி வருவதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.விளம்பரம் இல்லாமல் இந்த அபிவிருத்திகள் செய்யப்படுவதினால் பலருக்கும் இவை பற்றித் தெரியவருவதில்லை என்றும் அவர் கூறினார்.குருநாகல் மாவட்டத்தில் நிகவரட்டிய தொகுதியில் நம்முவாவ, ஒட்டுக்குளம் மற்றும் கல்கமுவ தொகுதியில்

மேலும்...
மூதூர் ஆயுள்வேத மத்திய மருந்தகம்; கிராமிய வைத்தியசாலையாகிறது: ஆணையாளர் தகவல்

மூதூர் ஆயுள்வேத மத்திய மருந்தகம்; கிராமிய வைத்தியசாலையாகிறது: ஆணையாளர் தகவல் 0

🕔13.Aug 2018

– எம்.எஸ்.எம். ஸாகிர் – மூதூர் ஆயுள்வேத மத்திய மருந்தகத்தை கிராமிய வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஆணையாளர் டொக்டர் திருமதி ஸ்ரீதர் தெரிவித்தார். மூதூர் ஆயுள்வேத மத்திய மருந்தக பொறுப்பதிகாரி டொக்டர் எச்.எம். ஹாரீஸ் தலைமையில் இடம்பெற்ற ஆயுள்வேத மத்திய மருந்தகத்தின் 21ஆவது வருட நிறைவு விழாவில்

மேலும்...
கூரை மீது ஏறி, பெண் கைதிகள் ஆர்ப்பாட்டம்

கூரை மீது ஏறி, பெண் கைதிகள் ஆர்ப்பாட்டம் 0

🕔13.Aug 2018

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளில் 10 பேர், சிறைச்சாலைக் கட்டத்தின் கூரையில் ஏறி, ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை காலை இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தங்களுக்கு எதிரான வழக்குகளை விரைவில் விசாரணை செய்யுமாறு கோரியே, இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும் அறிய முடிகிறது.

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில், அரசாங்கத்துக்கு விருப்பம் கிடையாது: பெப்ரல்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில், அரசாங்கத்துக்கு விருப்பம் கிடையாது: பெப்ரல் 0

🕔13.Aug 2018

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு அரசியல் விருப்பம் கிடையாது என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தலை நடத்துவதற்கான உடன்படிக்கையொன்றுக்கு வரவில்லை எனவும் பெப்ரல் கூறியுள்ளது. சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் ஆயுள்காலம் கடந்த வருடம் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் முடிவடைந்துள்ளன. அதன்

மேலும்...
பங்காளிக் கட்சிகள் எம்மை எதிரிகளாகப் பார்க்கின்றன: ஹக்கீம் கவலை

பங்காளிக் கட்சிகள் எம்மை எதிரிகளாகப் பார்க்கின்றன: ஹக்கீம் கவலை 0

🕔12.Aug 2018

அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் பங்காளிக் கட்சிகள் இன்று எங்களை கிழக்கில் மிகப்பெரிய எதிரிகளாக பார்க்கின்றன. சினேக சக்திகள் என்று நினைத்தவர்கள் இன்று பெரிய வில்லங்கமாக மாறியிருக்கின்றனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவுடனான சந்திப்பு நேற்று சனிக்கிழமை ஆலங்குளம் பிரதேசத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்