Back to homepage

பிரதான செய்திகள்

உபவேந்தர் தெரிவுக்கான வாக்கெடுப்பின் போது, நாஜிமுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

உபவேந்தர் தெரிவுக்கான வாக்கெடுப்பின் போது, நாஜிமுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் 0

🕔28.Jul 2018

 – முன்ஸிப் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தர் தெரிவுக்கான வாக்கெடுப்பு கொழும்பில் இன்று  சனிக்கிழமை நடைபெற்ற போது, பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் குழுவொன்று, அங்கு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் நாஜிமுக்கு எதிராகவே, இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக அறிய முடிகிறது. முன்னாள் உபவேந்தர் நாஜிமை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக மீண்டும் தெரிவு செய்யக் கூடாது

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக புதிய உபவேந்தர் தெரிவுக்கான வாக்கெடுப்பு: பேராசிரியர் நாஜிம் முன்னிலை

தெ.கி.பல்கலைக்கழக புதிய உபவேந்தர் தெரிவுக்கான வாக்கெடுப்பு: பேராசிரியர் நாஜிம் முன்னிலை 0

🕔28.Jul 2018

– அஹமட் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தரை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வும் வாக்கெடுப்பும்  இன்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் அதிகப்படியான (13) வாக்குகளைப் பெற்றுள்ளார் எனத் தெரியவருகிறது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கான புதிய உபவேந்தர் பதவிக்காக 19 பேர் விண்ணப்பித்திருந்த நிலையிலேயே, இன்றைய தினம்

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை நடத்தும் பொறுப்பிலிருந்து, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு விலகி விட முடியாது

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் பொறுப்பிலிருந்து, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு விலகி விட முடியாது 0

🕔28.Jul 2018

ஆட்சிக் காலம் நிறைவடைந்துள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் அதிகாரம் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உண்டு என்றும். அப்பொறுப்பிலிருந்து அந்த ஆணைக் குழு விலகிவிட முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார். மேலும் “ மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நவவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் அவர்

மேலும்...
சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கியுள்ளமை, ஜனநாயக விரோதமாகும்: தினேஷ் குணவர்த்தன

சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கியுள்ளமை, ஜனநாயக விரோதமாகும்: தினேஷ் குணவர்த்தன 0

🕔27.Jul 2018

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளமையானது ஜனநாயக விரோத செயலாகும் என்று, ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு அடுத்த படியாக நாடாளுமன்றில் கூடுதலான அங்கத்தவர்களைக் கொண்டுள்ள ஒன்றிணைந்த எதிரணியை உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் இது தொடர்பாக

மேலும்...
மாகாண சபைத் தேர்தல்; ஜனவரியில் நடத்துவதற்கான சாத்தியம் உள்ளது: பிரதமர் தெரிவிப்பு

மாகாண சபைத் தேர்தல்; ஜனவரியில் நடத்துவதற்கான சாத்தியம் உள்ளது: பிரதமர் தெரிவிப்பு 0

🕔27.Jul 2018

மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்துவதற்கான சாத்தியம் உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மத்திய மற்றும் ஊவா மாகாண சபைகள் தவிர்ந்த ஏனைய 07 சபைகளுக்கும், இவ்வாறு ஜனவரியில் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார். கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற போதே,

மேலும்...
வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இலங்கையர்களில் 600 பேர், வருடாந்தம் உயிரிழக்கின்றனர்

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இலங்கையர்களில் 600 பேர், வருடாந்தம் உயிரிழக்கின்றனர் 0

🕔26.Jul 2018

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புகளைப் பெற்றுச் செல்வோரில் 600 பேருக்கும் அதிகமானோர், பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட நிலையில் அங்கு ஒவ்வொரு வருடமும் உயிரிழக்கின்றனர் என்று, வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிலையினைக் குறைப்பதற்கும், வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் செல்லும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்

மேலும்...
அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு, நட்டஈடு வழங்கப்பட்டது

அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு, நட்டஈடு வழங்கப்பட்டது 0

🕔26.Jul 2018

அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்டு பெருமளவு சொத்துக்களை இழந்த 128 பேருக்கு, 182 மில்லியன் ருபாய் நட்டஈடு இன்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.தர்கா நகர் ஸாஹிராக் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்ற நட்டஈடு வழங்கும் நிகழ்வில், சுகாதாரம், போசனைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து அலுவல்கள் அமைச்சர் 

மேலும்...
பகிடிவதைக்கு 10 வருடம் சிறைத்தண்டனை: சட்டத்தில் இடமுள்ளது என்கிறார், உயர் கல்வி அமைச்சர்

பகிடிவதைக்கு 10 வருடம் சிறைத்தண்டனை: சட்டத்தில் இடமுள்ளது என்கிறார், உயர் கல்வி அமைச்சர் 0

🕔26.Jul 2018

பல்கலைக்கழகங்களில் பகிடி வதைகளில் ஈடுபட்டவர்களுக்கு 10 வருட கால சிறைத்தண்டனை விதிப்பதற்கு, சட்டத்தில் இடமிருப்பதாக உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, அண்மையில் ருகுணு பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 05 மாணவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இலங்கையில், கடந்த வருடத்தில் பகிடிவதை தொடர்பில் உயர்கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழகங்களில் 300

மேலும்...
பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்; கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவதானம்: அமைச்சர் பைசர் தெரிவிப்பு

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்; கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவதானம்: அமைச்சர் பைசர் தெரிவிப்பு 0

🕔26.Jul 2018

மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவது தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக இறுதி தீர்மானம் எடுப்பதற்காக, கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் இன்று வியாழக்கிழமை காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவு: இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்

தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவு: இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் 0

🕔26.Jul 2018

– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல், நாளை மறுதினம் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே, சம்மாந்துறையைச் சேர்ந்த எஸ்.எம்.எம். இஸ்மாயில் இந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக இருந்த காலத்தில், இந்த நிறுவனமானது ஊழல் மோசடிகள் நிறைந்த இடமாகக் காணப்பட்டது. இந்த நிலையில், அதற்கு ஒரு முற்றுப் புள்ளி கிடைக்கும் என்கிற

மேலும்...
தடையை மீறி பறப்பதற்கு தம்மாலோக தேரர் முயற்சி; தடுத்து நிறுத்தினர் அதிகாரிகள்

தடையை மீறி பறப்பதற்கு தம்மாலோக தேரர் முயற்சி; தடுத்து நிறுத்தினர் அதிகாரிகள் 0

🕔26.Jul 2018

உடுவே தம்மாலோக தேரர், இங்கிலாந்து பயணப்படவிருந்த நிலையில், குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை காலை, அவரை திருப்பியனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடு செல்ல தேரருக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளமை காரணமாகவே, அவர் இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், தேரருக்கு வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த நீதிமன்றத் தடையுத்தரவு ஓகஸ்ட் 26ஆம் திகதி முதல் செப்டம்பர் 12ஆம் திகதி

மேலும்...
செவ்வாய் கிரகத்தில் நீர்: ஆதாரம் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிப்பு

செவ்வாய் கிரகத்தில் நீர்: ஆதாரம் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிப்பு 0

🕔26.Jul 2018

செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவில் நீர் இருப்பதற்கான முதல் ஆதாரம் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ‘மார்ஸ் எக்ஸ்பிரஸ்’ என்ற செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படங்களை ஆராய்ந்தபோது, சிவப்பு கோளான செவ்வாயின் துருவ பனி முகடுகளுள்ள கிழக்குப்பகுதியில், 20 கிலோமீட்டர் பரப்பளவுக்கு இந்த ஏரி பரந்து விரிந்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதற்கு முந்தைய ஆராய்ச்சிகள் செவ்வாயின் மேற்பரப்பில் குறிப்பிட்ட

மேலும்...
ட்ரம்ப் சாமி: அமெரிக்க ஜனாதிபதியை கடவுளாக வழிபடும் விநோத மனிதர்

ட்ரம்ப் சாமி: அமெரிக்க ஜனாதிபதியை கடவுளாக வழிபடும் விநோத மனிதர் 0

🕔26.Jul 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கடவுள் எனக் கூறிக் கொண்டு, கடந்து மூன்று ஆண்டுகளாக நபர் ஒருவர் வணங்கி வருகின்றார். இந்தியா – கோன்னே பிரதேசத்தைச் சேர்ந்த புஸ்ஸா என்னும் இளைஞர் ஒருவரே இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை கடவுளாக வழிபடுவதோடு, தனது வீட்டிலுள்ள பூசை அறையிலும் ட்ரம்பின் படத்தை வைத்து வணங்கி வருகின்றார். ஒரு நாள் கூட

மேலும்...
இலங்கையில் தங்க ஆபரண, இரத்தினக்கல் கேந்திர நிலையத்தை நிர்மாணிக்கப் போவதாக சீன நிறுவனம் அறிவிப்பு

இலங்கையில் தங்க ஆபரண, இரத்தினக்கல் கேந்திர நிலையத்தை நிர்மாணிக்கப் போவதாக சீன நிறுவனம் அறிவிப்பு 0

🕔26.Jul 2018

நவீன தங்க ஆபரணம் மற்றும் இரத்தினக்கல் கேந்திர நிலையமொன்றை இலங்கையில் அமைப்பதற்கு சீனாவின் பிரமாண்டமான தங்க சுரங்க நிறுவனமான சேன் மெங்சியோ ஜிங்கு குறூப் முன்வந்துள்ளதுடன், சீனாவின் பட்டுப் பாதைத் திட்டத்தை  விரிவுபடுத்த இது பெரிதும் உதவுமெனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஷங்காய் தங்க பறிமாற்ற நிறுவனத்துக்கு பக்க பலமாக நின்று, உலகியேயே பௌதீக ரீதியான பிரமாண்டமான தங்கப் பரிமாற்ற

மேலும்...
மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க தீர்மானம்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க தீர்மானம்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔26.Jul 2018

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கையின் அமைச்சரவை இணைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். தென் இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மத்தல விமான நிலையத்தை இந்தியாவிற்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இலங்கையின் இவ்வார அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்