கட்சி பிளவுபடும்: மு.கா. தவிசாளர் பஷீர் சேகு­தாவூத் எச்சரிக்கை

🕔 May 11, 2016

Basheer - 034333முஸ்லிம் காங்­கி­ரஸின் உள்­ளக முரண்­பா­டுகள் உட­ன­டி­யாக பேசி தீர்க்கப்பட வேண்டும் என்றும் செய­லாளர்  ஹசன் அலியி­ட­மி­ருந்து பறிக்­கப்­பட்ட அதிகாரங்கள் மீள வழங்கப்பட வேண்டும் என்றும்  அந்தக் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகு­தாவூத் வலியுறுத்தியுள்ளார்.

இல்­லையேல் எதிர்­வரும் தேர்­தலில் முஸ்லிம் காங்­கிரஸ் பாரிய சரி­வி­னையும் பிளவினையும் எதிர்­கொள்ள வேண்டியேற்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மு.கா.வின் உள்ளக முரண்பாடுகள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“கட்­சியின் உள்­ளக முரண்­பா­டுகள் தீர்க்­கப்­பட்டு செய­லாளர் ஹசன் அலி­யி­ட­மி­ருந்து பறிக்­கப்­பட்ட அதி­கா­ரங்கள் மீள வழங்­கப்­ப­டா­விட்டால் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் கட்சி பல சவால்­களை எதிர்­நோக்க வேண்­டி­யேற்­படும்

தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு வேட்­பா­ளர்­களைத் தெரிவு செய்­வதில் சிக்கல் நிலை தோன்­று­வ­துடன் கட்­சியின் வாக்கு வங்­கி­யிலும் சரிவு ஏற்­படும்.

கட்­சியில் எனக்கு எது­வித பிரச்­சி­னையும் இல்லை. நான் கட்­சியை நேசிப்­பவன். கட்சியின் செய­லா­ள­ருக்கு இழைக்­கப்­பட்ட அநீ­திக்கும், கட்­சியின் கொள்­கை­க­ளுக்கு மாறான தீர்­மா­னங்­களுக்கும் எதிராகவே நான் குரல் கொடுக்­கிறேன்.

நான் நீதிக்­கா­கவே போரா­டு­கிறேன். இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களால் கட்சி பிள­வு­படக்  கூடாது என்­ப­தற்­கா­கவே எழுந்து நிற்­கிறேன்.

கட்சி எதிர்­கால சவால்­களை எதிர்­கொள்­வ­தற்­காக கட்­சியை தூய்­மைப்­ப­டுத்த வேண்டி­யுள்­ளது. கட்­சியின் உள்­ளக முரண்­பா­டு­களை தீர்த்து வைப்­ப­தற்­காக நிய­மிக்கப்­பட்­டுள்ள மூவர் அடங்­கிய குழு, ஹசன் அலி­யுடன் பல கட்ட பேச்­சு­வார்த்தைகளை நடாத்­தி­யுள்­ளது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்