வேன் விபத்து
– க. கிஷாந்தன் –
கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற வேன், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் பீக் ரெஸ்ட் விடுதி பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை விபத்துக்குள்ளாகியது.
இந்த நிலையில், வேனில் பயணித்தவர்கள் விபத்து நடைபெற்றமையினையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
குறித்த வேன், பீக் ரெஸ்ட் விடுதி பகுதியில் வீதியை விட்டு விலகி மதில் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வேனில் பயணித்தோர் தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று பொலிஸார் கூறுகின்றனர்ட.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.