அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில் கருத்தரங்கு

🕔 May 5, 2016

ADJF - Logo - 01– எஸ். அஷ்ரப்கான் –

டகவியலாளர்களுக்கான சட்ட ஆலோசனைகள், புலனாய்வு அறிக்கை மற்றும் ஊடக ஒழுக்கக் கோவை போன்ற விடயங்களை உள்ளடக்கிய, கருத்தரங்கொன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 08 ஆம் திகதி சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் செயலாளர் எம். சஹாப்தீன் தெரிவித்துள்ளார்.

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை, இந்தக் கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ளது.

பொத்துவில் – அக்கரைப்பற்று சட்ட உதவி ஆணைக் குழுவின் அனுசரணையில் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில், பேரவையின் சகல உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

குறித்த தினம்ட காலை 8.30 மணி முதல் மாலை 2.30 மணி வரை நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு பிரதி பணிப்பாளர் அமீர் ஹுஸைன் வளவாளராகக் கலந்து கொள்ளவுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்