தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அடையாள வேலை நிறுத்தம் 

🕔 March 31, 2016
SEUSL - 0111
– எம்.வை. அமீர் –

தென்கிழக்கு பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்கள், இன்று வியாழக்கிழமை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்துப் பல்கலைக்கழக உழியர் சங்க சம்மேளனத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, சகல பல்கலைக் கழகங்களிலும் கல்விசார ஊழியர்களால் இன்று வியாழக்கிழமை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கிணங்க, குறித்த வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும், அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஊழியர்களின் சம்பள முரண்பாடு, ஓய்வுதியம் மற்றும் ஏனைய பல விடயங்கள் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்து, இன்றைய வேலைநிறுத்தத்தில் தாங்கள் இறங்கியுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் வை .முபாரக் தெரிவித்தார்.

ஊழியர்களின் கோரிக்கைகளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் உயர்கல்வி அமைச்சும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும், கோரிக்கைகள் தொடர்பில்  கவனம் செலுத்தாது விடின் எதிர்காலத்தில் தொடர்சியான  போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்  சங்கத்தின் தலைவர் முபாரக் சுட்டிக் காட்டினார்.
SEUSL - 0444

Comments

புதிது பேஸ்புக் பக்கம்