கல்முனை ஸாஹிராவில் 06 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ தர சித்தி

🕔 March 21, 2016

GCE OL - Zahira - 01
– எம்.ஏ. அஹ்ஸன் அக்தர் –

ல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி 06 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ தர சித்தியினைப் பெற்றுள்ளனர்.

இதேவேளை, இந்தக் கல்லூரியில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய 80 வீதமான மாணவர்கள் உயர்தர பிரிவில் கல்வி கற்க தகுதி பெற்றுள்ளனர்.

மேலும், ஸாஹிறாக் கல்லூரயின் 11 மாணவர்களுக்கு 08 பாடங்களிலும் 10 மாணவர்களுக்கு 07 பாடங்களிலும் 11 மாணவர்களுக்கு 06 பாடங்களிலும்  09 மாணவர்களுக்கு 05 மாணவர்களுக்கும் ‘ஏ’ தரச் சித்திகள் கிடைத்துள்ளன.

அந்தவகையில் ஏ.ஆர்.எம். அப்ரார் , அலிக்கான் அஹமட் .சிபி ( ஆங்கில மொழி மூலம் ) , ஐ.எல். இஹ்ஸாம் , ஏ.ஏ. ஆதில் , எம்.ஆர். ஆசிக்  யு.எல்.எம். ஆப்ரித் ஆகிய மாணவர்கள் 09 பாடங்களிலும் ‘ஏ’ தர சித்தி பெற்றுள்ளனர்.

பரீட்சை முடிவுகளின்படி உயர்தரத்தில் கணித , விஞ்ஞான , வர்த்தக , கலை மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் கல்வி பயில்வதற்கு 200 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

சித்தியடைந்த மாணவர்களுக்கும் , கற்பித்த ஆசிரியர்களுக்கும் கல்லூரி அதிபர் பீ.எம்.எம். பதுறுதீன் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்