அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் மாதந்தக் கூட்டம்; பொத்துவில் ‘ப்ளு வேவ்’ ஹோட்டலில் ஏற்பாடு

🕔 March 18, 2016

ADJF - Logo - 01ம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் (Amparai District Journalists’ Forum) மாதாந்தக் கூட்டம், எதிர்வரும் 22 ஆம் திகதி செவ்வாய்கிழமை பொத்துவில் ‘ப்ளு வேவ்’ ஹோட்டலில் நடைபெறவுள்ளதாக, பேரவையின் செயலாளர் எம். சஹாப்தீன் தெரிவித்தார்.

பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் அமைந்துள்ள மேற்படி ஹோட்டலில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, அங்கத்தவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இக் கூட்டத்தில், பேரவையின் ஆலோசகர்களில் ஒருவரும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன செய்திச் சேவையின் தமிழ் பிரிவுப் பணிப்பாளருமான யூ.எல். யாக்கூப் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அதன் முதலாவது மாதாந்தக் கூட்டம் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்