ஊடகவியலாளரை அச்சுறுத்திய விவகாரம்; நீதிமன்றில் ஆஜராகுவதாக தம்மிக்க தெரிவிப்பு

🕔 March 18, 2016
Dhammika ranathunga  - 09லங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க, எதிர்வரும் 24 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுவதாக வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் அறிவித்துள்ளார்.

வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்துக்கு தனது சட்டத்தரணியுடன் இன்று வெள்ளிக்கிழமை சென்றிருந்த தம்மிக ரணதுங்க, இதைத் தெரிவித்துள்ளார்.

துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க, அண்மையில் நீதிமன்றத்திற்கு வெளியில் படம் பிடித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தியதுடன் அவரை கைத்தொலைபேசியில் படம் பிடித்தார்.

இது குறித்து, ஊடகவியலாளர் – வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். இதற்கிணங்க, பொலிஸார் இது குறித்து கொழும்பு நீதவான் நீதிமன்றததில் பீ அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து, தம்மிக ரணதுங்கவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்