தேவையேற்படின் கட்சியிலிருந்து நீக்குவோம்; சுதந்திரக் கட்சி செயலாளர் தெரிவிப்பு

🕔 March 18, 2016

Duminda dissanayake - 01ன்றிணைந்த எதிர்க்கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில், மஹிந்தர ராஜபக்ஷ உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆயினும், சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இதில் கலந்து கொள்ளக் கூடாது என்று, கட்சியினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தொடர்பில் ஊடகம் ஒன்றினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதலளிக்கும் போதே, துமிந்த திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“எதிர்வரும் வாரத்தில், மேற்படி  நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விளக்கம் கோரப்படும். அதன் பின்னர் மத்திய செயற்குழுவினைக் கூட்டி தீர்மானம் எடுக்கப்படும். கட்சியின் ஒழுக்க விதிகளைப் பேணிப் பாதுகாப்பதற்காக, குறித்த கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக கடுமையான ஓழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். தேவையேற்படின் சம்மந்தப்பட்டவர்களை கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்குவதற்கும் தயக்கம் காட்ட மாட்டோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்