விமலுக்கு பிணை; பொலிஸில் வாக்கு மூலம் வழங்குமாறும் உத்தரவு

🕔 March 18, 2016
Wimal - 08976நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவருடன் தேசிய சுதந்திர முன்னணியின் 07 உறுப்பினர்களை, தலா ஒரு லட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராஅத் அல் ஹூசைனின் இலங்கை விஜயத்தை எதிர்த்து, தேசிய சுதந்திர முன்னணியினர் கடந்த பெப்ரவரி மாதம் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மக்களுக்கு இடைஞ்சல் விளைவித்ததாகத் தெரிவித்து கறுவாத்தோட்டம் பொலிஸார் வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்தனர்.

இதேவேளை, தேசிய சுதந்திர முன்னணியினர் – ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி பெற்றிருக்கவில்லை என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு 06 மணித்திலாயங்களுக்கு முன்னர் அனுமதி பெற வேண்டும் என்ற போதிலும், அவர்கள் அவ்வாறான அனுமதியை பெறவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணைகளை ஜூன் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், எதிர்வரும் 26 ஆம் திகதி கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலங்களை வழங்குமாறு சந்தேக நபர்களுக்கு உத்தரவிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்