தலைப்புச் செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் பிரத்தியேகச் செயலாளருக்குப் பிணை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய சமரசிங்கவை, கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (20) பிணையில் விடுவித்தார்.

குற்றச் செயல்கள் மூலம் பெறப்பட்டதாகக் கருதப்படும் சொத்துக்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், ‘லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இவரை நேற்று கைது செய்தது.

நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை ஆராய்ந்த நீதவான், தலா 10 லட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணையில் – சந்தேக நபரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

மேலும், சந்தேக நபர் – நாட்டை விட்டு வெளியேற முடியாதவாறு அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணைகள் டிசம்பர் 10-ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தொடர்பான செய்தி: நாமலின் பிரத்தியேக செயலாளர் கைது; பாதுகாப்புப் பெட்டியொன்றும் அவர் வீட்டில் மீட்பு